எதிர்வரும் சனிக்கிழமை (27) ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி தொடருக்கான இலங்கை அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
15 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தில் இம்மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி எதிர்வரும் ஓகஸ்ட் 24ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு புறப்படவுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழு கூட்டத்தை தொடர்ந்து, 2022 ஆசிய கிண்ணம் தொடரில் பங்கேற்கபதற்கான அணி தெரிவு செய்யப்பட்டதாக, இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இதற்கமைவாக 20 பேர் கொண்ட குறித்த பட்டியலை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தசுன் ஷானக – தலைவர்
தனுஷ்க குணதிலக்க
பெத்தும் நிஸ்ஸங்க
குசல் மெண்டிஸ் – விக்கெட் காப்பாளர்ஃ துடுப்பாட்ட வீரர்
சரித் அசலங்க – உப தலைவர்
பானுக ராஜபக்ஷ – விக்கெட் காப்பாளர்ஃ துடுப்பாட்ட வீரர்
அஷேன் பண்டார
தனஞ்சய டி சில்வா
வணிந்து ஹசரங்க
மகேஷ் தீக்ஷண
ஜெஃப்ரி வந்தர்சே
பிரவீன் ஜயவிக்ரம
சாமிக்க கருணாரத்ன
தில்ஷான் மதுஷங்க
மதீஷ பத்திரண
நுவனிது பெனாண்டோ
துஷ்மந்த சமீர
தினேஷ் சந்திமால் – விக்கெட் காப்பாளர்ஃ துடுப்பாட்ட வீரர்
அசித்த பெனாண்டோ – பினுர பெர்னாண்டோவின் இடத்திற்கு
பிரமோத் மதுஷான் – கசுன் ராஜிதவின் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இத்தொடரில் முதலாவது போட்டியில் 27 ஆம்திகதி (27 August, Dubai ) இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளுகின்றது.
அணிக்கு தெரிவு செய்யப்பட்டு காயமடைந்த பினுர பெனாண்டோ மற்றும் கசுன் ராஜித ஆகியோருக்கு பதிலாக அசித்த பெனாண்டோ மற்றும் பிரமோத் மதுஷான் ஆகியோரை இணைப்பதற்கான அனுமதிக்காக கடந்த ஓகஸ்ட் 16ஆம் திகதி விளையாட்டு அமைச்சருக்கு அவர்களது பெயர் அனுப்பி வைக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளதாகஇ இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.