\"அணு ஆயுதங்கள் இருக்கு.. எங்க ராணுவ பலம் தெரியுமா!\" காஷ்மீர் விவகாரம் குறித்தும் பாக். பிரதமர் பரபர

இஸ்லாமாபாத்: காஷ்மீரில் தொடர்ந்து பதற்றமான சூழலில் நிலவி வரும் நிலையில், இது தொடர்பாக இப்போது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

சுதந்திரம் அடைந்தது முதலே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்லதொரு உறவு இருந்ததில்லை. எப்போதும் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வரும்.

குறிப்பாக, காஷ்மீர் விவகாரத்தைச் சொல்லலாம். இந்தியாவுக்குச் சொந்தமான காஷ்மீரை தங்களுக்குச் சொந்தம் எனப் பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருவதே இரு நாடுகளுக்கும் இடையே சிக்கல் தொடர காரணமாக உள்ளது.

காஷ்மீர்

இந்தச் சூழலில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான காஷ்மீர் பிரச்சினைக்குப் போர் மூலம் தீர்வு காண முடியாது என்றும் பேச்சுவார்த்தை மூலமே இந்தியாவுடன் நிரந்தர அமைதியை ஏற்படுத்தப் பாகிஸ்தான் விரும்புகிறது என்றும் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

 ஷேபாஸ் ஷெரீப்

ஷேபாஸ் ஷெரீப்

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ஷேபாஸ் ஷெரீப், “ஐநா தீர்மானங்களின்படி காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே அந்த பிராந்தியத்தில் நிலையான அமைதியை ஏற்படுத்த ஒரே தீர்வு. காஷ்மீர் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே பாகிஸ்தான் விருப்பம். அதேபோல இந்தியா உடனும் நிரந்தரமாக அமைதியைப் பேணிக் காக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

போர்

போர்

இரு நாடுகளுக்கும் இடையே இப்போது போர் என்பது ஆப்ஷனாக கூட இல்லை” என்று தெரிவித்தார். காஷ்மீர் பிரச்சனை மற்றும் பாகிஸ்தானில் இருந்து அத்துமீறும் பயங்கரவாதிகள் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மோசமாக்குகிறது. ஜம்மு காஷ்மீர் என்றென்றும் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும் என்று இந்தியா தொடர்ந்து கூறி வரும் போதிலும், அதைப் பாகிஸ்தான் இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை.

போட்டி

போட்டி

தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவும் பாகிஸ்தானும் வர்த்தகம், பொருளாதாரம், மக்கள் நிலையை மேம்படுத்துவது உள்ளிட்டவற்றில் போட்டிப் போட வேண்டும். நாங்கள் எந்தவொரு நாட்டையும் ஆக்கிரமிக்க மாட்டோம். ஆனால் எங்களிடம் அணு ஆயுதங்கள் மற்றும் சக்திவாய்ந்த ராணுவம் இருக்கிறது என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.

 என்ன காரணம்

என்ன காரணம்

சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமின்மை காரணமாக இப்போது பாகிஸ்தான் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளது உண்மை தான். பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்து முதல் சில தலைமுறைகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகச் சிறப்பாக இருந்தது. ஆனால், காலப்போக்கில் வளர்ந்த வந்த துறைகளில் கூட வளர்ச்சியை இழந்தோம். முறையான கொள்ளை, திட்டமிடல் இல்லாததால் தேசிய உற்பத்தித்திறன் குறைந்தது” என்றார்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

ஒரு கட்டத்தில் ஆசியாவில் மிகவும் வளர்ந்த நாடாக மாற இருந்த பாகிஸ்தான் இப்போது இந்த நிலையில் இருப்பதாகவும் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்தார். பாகிஸ்தானும் இப்போது இக்கட்டான ஒரு பொருளாதார சூழலில் தவித்து வருகிறது. அந்நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 13.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. அந்நாட்டின் ரூபாய் மதிப்பும் வீழ்ந்து வரும் நிலையில், விலைவாசியும் விண்ணைத் தொட்டுள்ளது. இதனால் இக்கட்டான சூழலில் தான் பாகிஸ்தான் உள்ளது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.