இந்தியாவில் சற்று குறைந்த தினசரி கோவிட் பரவல்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,539 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,539 பேருக்கு கோவிட் உறுதியானது. இதனால்,மொத்த பாதிப்பு 4,43,39,429 ஆனது. கோவிட் தொற்றில் இருந்து 4,37,12,218 பேர் மீண்டுள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் காரணமாக 34 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இறந்தவர்களின் எண்ணிக்கை 5,27,332 ஆனது. தற்போது 99,879 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 26,58,755 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால், இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 209.67 கோடி டோஸ் ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.