இந்தியா வேற லெவலில் இருக்கும்.. ஆனந்த் மகேந்திரா பகிர்ந்த வீடியோவா பாருங்க!

மகேந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த மஹிந்திரா எப்போதும் தனது சமுக வலைதள பக்கத்தில் ஆக்டிவ்வாக இருப்பவர். தனக்கு கிடைத்த வித்தியாசமான, திறமைமிக்க பதிவுகளை பகிர்ந்து வருகின்றார்.

அந்த வகையில் தற்போது தனித்துவம் மிக்க ஒரு வீடியோவினை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் மின்சார ஜீப்பினை வடிவமைத்த ஒரு மெக்கானிக்கின் பதிவினை பகிர்ந்துள்ளார்.

கெளதம் பகிர்ந்த வீடியோ

ஏ கெளதம் என்ற நபர், அவரின் ட்விட்டர் பக்கத்தில் நாங்கள் ஜீப்பின் முன் சக்கரம் மற்றும் பின் சக்கரத்தை தனித் தனியாக கட்டுப்படுத்துகிறோம். தயவு செய்து எனக்கு வேலை கொடுங்கள் சார் என, ஆனந்த் மகேந்திராவை டேக் செய்து ஒரு வீடியோவினையும் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு ஜீப் முன் சக்கரம் தனியாகவும், பின் சக்கரம் தனியாகவும் இயங்குவதை பார்க்க முடிகிறது.

 ஆனந்த் மகேந்திரா

ஆனந்த் மகேந்திரா

கெளதமின் வீடியோவினை பகிர்ந்துள்ள மஹிந்திரா, இதனால் தான் இந்தியா மின்சார வாகன உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் என்று நான் நம்புகிறேன். கார்கள் மற்றும் தொழில் நுட்பத்தின் மீதான ஆர்வம் காரணமாகத் தான், அமெரிக்கா அதன் ஆட்டோக்களில் ஆதிக்கம் செலுத்துகிறது என்று நான் நம்புகிறேன். கெளதம் & அவரின் குழுவினரும் செழிக்கட்டும் என்று கூறிய மகேந்திரா, @Velu _mahintra -வினை டேக் செய்து தயவு செய்து கெளதமை அணுகவும் என பதிவிட்டுள்ளார்.

பல ஆயிரம் பேர் லைக்
 

பல ஆயிரம் பேர் லைக்

ஆனந்த் மகேந்திராவின் இந்த ட்விட்டர் பக்கத்தினை கிட்டதட்ட 9500 பேர் லைக் செய்துள்ள நிலையில், 855 பேர் ரீ ட்வீட் செய்துள்ளது. பலரும் தங்களது பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

அதில் சில பயனர்கள், சார் உங்களுடனை பாராட்டுகளும், ஊக்குவிப்பும் நிச்சயம், இந்தியாவினை இந்த துறையில் முதன்மை இடத்திற்கு கொண்டு வரும் என தெரிவித்துள்ளார்.

வேலை வாய்ப்பினை உருவாக்க ?

வேலை வாய்ப்பினை உருவாக்க ?

தொடர்ச்சியாக இதுபோன்ற திறமைகளை ஆனந்த் மகேந்திரா ஊக்குவித்து வருகின்றார். சமீபத்தில் மகேந்திரா குழுமத்தின் 76வது கூட்டத்தில் , பெரியளவில் வேலை வாய்ப்பினை உருவாக்கும் விதமாக அதிகரிக்க வேண்டும். இந்தியாவுக்கு சாதகமாக நகரும் உலகளாவிய காரணிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

உற்பத்தி அதிகரிக்க திட்டம்

உற்பத்தி அதிகரிக்க திட்டம்

நாட்டிற்கு கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும். பெரியளவில் உற்பத்தியினை அதிகரிக்கவும், உலகளாவிய காரணிகளை பயன்படுத்துவதற்கும் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். பெரிய நிறுவனங்களை காட்டிலும் மிக முக்கியமானது எம் எஸ் எம் இ-க்கள், அவை உற்பத்தியின் உள்ளூர்மயமாக்கல் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான போக்கை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மகேந்திரா கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Mahindra’s Anand mahindra shares inspirational video: india will become a leader

Mahindra’s Anand mahindra shares inspirational video: india will become a leader/இந்தியா வேற லெவலில் இருக்கும்.. ஆனந்த் மகேந்திரா பகிர்ந்த வீடியோவா பாருங்க!

Story first published: Sunday, August 21, 2022, 13:41 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.