Himachal Flood: இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் பல பகுதிகளில் நாசத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காணாமல் போயுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால், இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு, திடீர் வெள்ளம் மற்றும் மேக வெடிப்பு சம்பவங்கள் பேரழிவை உருவாக்கியுள்ளன. தொடர் மழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உட்பட குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும், மழை தொடர்பான சம்பவங்களில் குறைந்தது 31 பேர் இறந்துள்ளனர். உத்தரகாண்ட் மற்றும் ஒடிசாவில் தலா நான்கு மற்றும் ஜார்கண்டில் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.
743 சாலைகளில் போக்குவரத்து தடைப்பட்டது
மண்டி, காங்க்ரா மற்றும் சம்பா மாவட்டங்களில் அதிகபட்ச சேதம் ஏற்பட்டுள்ளது. இடைவிடாமல் பெய்த மழை காரணமாக, மாநிலத்தில் இதுவரை 36 வானிலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மண்டியில் மணாலி-சண்டிகர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஷோகியில் சிம்லா-சண்டிகர் நெடுஞ்சாலை உட்பட 743 சாலைகள் தடைப்பட்டுள்ளன.
#WATCH | Himachal Pradesh: The railway bridge on Chakki river in Himachal Pradesh’s Kangra district damaged due to flash flood, and collapsed today morning. The water in the river is yet to recede: Northern Railways pic.twitter.com/ApmVkwAkB8
— ANI (@ANI) August 20, 2022
மாண்டியில் மட்டும் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்ததாகவும், 5 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கோஹார் மேம்பாட்டுத் தொகுதியின் கஷான் கிராமத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எஃப்) மற்றும் காவல்துறையின் நான்கு மணி நேர நீண்ட தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு ஒரு குடும்பத்தைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்களின் உடல்கள் அவர்களது வீட்டின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டன.
நிலச்சரிவில் பல வீடுகள் சேதமடைந்தன
மேக வெடிப்பு நிகழ்ந்த பிறகு, பல குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். சிம்லாவில் உள்ள தியோக்கில் கார் ஒன்று பாறாங்கல் மீது மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் இருவர் காயமடைந்தனர். சம்பாவில் உள்ள சௌவாரியின் பானெட் கிராமத்தில் அதிகாலை 4.30 மணியளவில் நிலச்சரிவைத் தொடர்ந்து ஒரு வீடு இடிந்து விழுந்ததில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
ரயில் சேவை நிறுத்தப்பட்டது
காங்க்ராவில் ஒரு வீடு இடிந்து விழுந்ததில் ஒன்பது வயது குழந்தை உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, சனிக்கிழமை பெய்த கனமழையால் இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள சக்கி பாலம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து ஜோகிந்தர்நகர்-பதான்கோட் வழித்தடத்தில் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
ரயில்வே அதிகாரிகள் பாலம் பாதுகாப்பற்றதாக அறிவித்துள்ளதாகவும், பதான்கோட் (பஞ்சாப்) முதல் ஜோகிந்தர்நகர் (இமாச்சலப் பிரதேசம்) வரையிலான குறுகிய பாதையில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வெள்ளத்தில் சிக்கிய 30 பேர் மீட்பு
ஹமிர்பூரில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய 30 பேர் மீட்கப்பட்டுள்ளனர். முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.
கனமழை காரணமாக மண்டியில் மணாலி-சண்டிகர் நெடுஞ்சாலை மற்றும் ஷோகியில் சிம்லா-சண்டிகர் நெடுஞ்சாலை உட்பட 743 சாலைகள் தடைபட்டுள்ளன. இன்று 407 வீதிகள் புனரமைக்கப்படும் எனவும் நாளைய தினம் 268 வீதிகள் துப்பரவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
பல இடங்களுக்கு அபாய எச்சரிக்கை
சோனு பங்களா என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால், சண்டிகர்-சிம்லா தேசிய நெடுஞ்சாலையில் ஷோகி மற்றும் தாரா தேவி இடையே போக்குவரத்து தடைபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மாநிலத்தின் பல பகுதிகளில் குடிநீர் மற்றும் மின்சார விநியோகம் ஸ்தம்பித்துள்ளது. இங்கு நடந்த கூட்டத்தில், மாநில தலைமைச் செயலாளர் ஆர்.டி.திமன், அடிப்படைத் தேவைகள் விநியோகம் பாதிக்கப்படாத வகையில் சாலைகளை சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட்டார். மேலும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை வீடியோ பதிவு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம் வழங்க உத்தரவிட்டார்.
மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மாவட்டங்களுக்கு ரூ.232.31 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காக அனைத்து மாவட்டங்களிலும் போதுமான நிதி உள்ளது என்றும் முதன்மைச் செயலாளரிடம் வருவாய்த்துறை முதன்மைச் செயலர் தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ