ராஜஸ்தானில் இறைச்சிக்காக பசுக்களை கடத்திய 5 பேரை கொலை செய்ததாக அம்மாநில பாரதிய ஜனதா மூத்த தலைவர் கியான் டி அஹுஜா பேசியிருக்கும் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வரும் அந்த வீடியோவில், பசுக்கடத்தலில் ஈடுபடுவோரை கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும் என்றும், தப்பிக்க முயன்றால் அடித்து தாக்கி காவல்துறையில் ஒப்படைக்க வேண்டும் எனவும் பாரதிய ஜனதா கட்சியினருக்கு அஹூஜா அறிவுறுத்துகிறார்.
Muslims protected by Rajasthan CM Gehlot.I’ve told my workers that those found cow smuggling should be caught&if they try to escape they should be thrashed & handed over to police.Won’t take law into my hands: Gyan D Ahuja,BJP on his”We’ve killed 5 so far”comment in a viral video pic.twitter.com/XyoNncJ0ZI
— ANI (@ANI) August 21, 2022
மேலும் சட்டத்தை தாங்கள் ஒருபோதும் கையிலெடுக்க மாட்டோம் என்றும் அவர் பேசி உள்ளார். ராஜஸ்தானில் முஸ்லிம்களை முதலமைச்சர் அசோக் கெலாட் பாதுகாப்பதாக கியான் டி அஹுஜா பேசியிருப்பதும் சர்ச்சையாகி உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM