தமிழ்நாடு இளைஞர் ஒருவர் சொந்தமாக எலக்ட்ரிக் ஜீப் ஒன்றை தயாரித்து ஆனந்த் மஹிந்திராவிடம் தனக்கு உங்கள் நிறுவனத்தில் வேலை வேண்டும் என கேட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
டிவட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆனந்த் மஹிந்திரா, அந்த இளைஞரின் கோரிக்கையை ஏற்று அவருக்குப் பதிலும் அளித்துள்ளார்.
யார் அந்த தமிழ்நாடு இளைஞர்? அவருக்கு வேலை கிடைத்ததா இல்லை என விளக்கமாகப் பார்க்கலாம்.
இந்தியா வேற லெவலில் இருக்கும்.. ஆனந்த் மகேந்திரா பகிர்ந்த வீடியோவா பாருங்க!
தமிழ்நாட்டு இளைஞர்
தமிழ்நாட்டின் கீழடி கிராமத்திலிருந்து கவுதம் என்ற இளைஞர், டிவிட்டரில் ஆனந்த் மஹிந்திராவை டேக் செய்து, “முன், பின் சக்கரங்களையும் தனித்தனியாக இயக்கலாம். எனக்கு வேலை தாருங்கள் சார்” என கேட்டுள்ளார்.
பதில் அளித்த ஆனந்த் மஹிந்திரா
அந்த இளைஞரின் டிவட்டர் பதிவுக்கு பதில் அளித்துள்ள ஆனந்த் மஹிந்திரா, “இதனால் தான் இந்தியா எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன். கார்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான மக்களின் ஆர்வம் மற்றும் கேரேஜ் ‘டிங்கரிங்’ மூலம் அவர்களின் கண்டுபிடிப்புகளின் காரணமாக அமெரிக்கா ஆட்டோக்களில் ஆதிக்கம் செலுத்தியது என்று நான் நம்புகிறேன். வேலு மஹிந்திரா தயவு செய்து அவரை அணுகுங்கள்” என தெரிவித்துள்ளார்.
எக்ஸ்யூவி எலக்ட்ரிக் கார்
இந்தியாவில் e2, e2o சிறிய ரக எலக்ட்ரிக் கார்களை முதலில் அறிமுகம் செய்த மஹிந்திரா இப்போது வெரிட்டோ எலக்ட்ரிக் காரை தொடர்ந்து, புதிதாக 5 எக்ஸ்யூவி எலக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
பிஈ பிராண்டு
இந்தியாவில் இப்போது எலக்ட்ரிக் கார் விற்பனையில் டாடா முதலிடத்தில் உள்ள நிலையில் விரைவில் மஹிந்தராவின் பிஈ எலக்டிரிக் கார்கள் மிகப் பெரிய போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamil Nadu Man Who Built Electric Jeep Asks Anand Mahindra For Job
எலக்டிரிக் ஜீப் தயாரித்து ஆனந்த் மஹிந்திராவிடம் வேலை கேட்ட தமிழ்நாடு இளைஞர்! | Tamil Nadu Man Who Built Electric Jeep Asks Anand Mahindra For Job