தரப்பில் இருந்த அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள், ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவது, எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து,
, வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அண்மையில் தீர்ப்பு அளித்தார்.
அதில், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் மாதம் 23 ஆம் தேதி இருந்த நிலையே தொடரும் என்றும் தெரிவித்தார். இந்த தீர்ப்பு
தரப்புக்கு சாதகமாக வந்துள்ளதால், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தத் தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக நலன் கருதி மீண்டும் ஒருங்கிணைந்து செயல்பட எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்க மறுத்த எடப்பாடி பழனிசாமி, நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடும் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி வசமுள்ள பொதுக்குழு உறுப்பினர்கள், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவு தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாளுக்கு நாள், ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதுவரை சுமார் 10-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவி உள்ளனர்.
இதற்கிடையே, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு, ஓ.பன்னீர்செல்வம் விரைவில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தலைமைக் கழக அலுவலகத்திற்கு செல்லவும், கட்சிப் பணிகளை மேற்கொள்ளவும் அவர் செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரமும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இது ஒரு புறமிருக்க, தனக்கு தொண்டர்கள் ஆதரவு இருப்பதை காட்ட, மேலும் பல பொதுக்குழு உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்க, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தூண்டில் போட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், வரும் நாட்களில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு பெருகும் என அவரது ஆதரவாளர்கள் ஆரூடம் தெரிவித்து வருகின்றனர்.