காஸ்ட்லி சொகுசு கார் வாங்கிய ஃபகத் ஃபாசில்…விலை எவ்வளவு தெரியுமா?

திருவனந்தபுரம் : மலையாள திரையுலக பிரபலங்களில் நடிகர் ப்ருத்விராஜை தொடர்ந்து, தற்போது ஃபகத் ஃபாசிலும் காஸ்ட்லி கார் ஒன்றை வாங்கி உள்ளார். Lamborghini Urus வகை கார் ஆழப்புழா மாவட்ட ரிஜிஸ்டிரேஷனில் கொண்டதாக உள்ளது.

உலகின் மிக வேகமாக செல்லும் SUV ரக கார் என வர்ணிக்கப்படும் இந்த கார், ஸ்போர்ட்ஸ் வகை கார் ஆகும். இந்த கார் கேரள சாலைகளில் உலா வீடியோக்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.

கடந்த ஆண்டு தான் தனது காதல் மனைவி நஸ்ரியாவிற்கு Python Green Porsche 911 Carrera S காரை பரிசாக அளித்தார் ஃபகத். இந்த கார் இந்தியாவில் ஒரு சிலரிடம் மட்டுமே உள்ளது. நடிகர்கள் ராம் கபூர், மம்தா மோகன்தாஸ், கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு பிறகு ஃபகத் அந்த காரை வாங்கினார்.

தற்போது மற்றொரு காஸ்ட்லி கார் ஒன்றை வாங்கி உள்ளார் ஃபகத். இதன் விலை அதிகம் இல்லை. ரூ.3.15 கோடி மட்டும் தான். இந்த காரை தற்போது வாங்கியதற்கு, ஃபகத் – நஸ்ரியா தங்களின் திருமண நாள் ஸ்பெஷலாக தான் இந்த காரை வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

ஃபகத்- நஸ்ரியா தம்பதிக்கு திருமணமாகி இன்றோடு 8 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதை கொண்டாடுவதற்காக தான் இந்த காஸ்ட்லி கார். வருடத்திற்கு ஒரு காஸ்ட்லி கார் வாங்கினாலும், இவர்கள் இவரும் ஜாலி ரைடு போவது என்னவோ சைக்கிளில் தான்.திருமண நாளை முன்னிட்டு ஜாலியாக இருவரும் சைக்களில் சுற்றி வரும் வீடியோவை தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

திருமணமாகி அதற்குள் 8 ஆண்டுகள் ஓடி விட்டதாகவும் ஆச்சரியமாக தெரிவித்துள்ளனர். இந்த பதிவிற்கு இவர்களுக்கு வாழ்த்துக்களும், லைக்குகளும் குவிந்து வருகிறது. பிரபலங்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவிந்து வருகின்றனர்.

ஃபகத் ஃபாசில் தற்போது தமிழில் மாமன்னன், தெலுங்கில் புஷ்பா, மலையாளத்தில் பாட்டு உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இவரது மனைவியும் பிரபல நடிகையுமான நஸ்ரியாக கடைசியாக அன்டே சுந்தரனிகி என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தமிழ் உள்ளட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.இவர்கள் இருவரும் படங்களில் நடிப்பதுடன் சில படங்களை தயாரித்தும் வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.