சென்னை:
மாநாடு
படத்தின்
வெற்றியைத்
தொடர்ந்து
வெந்து
தணிந்தது
காடு,
பத்து
தல
படங்களில்
நடித்து
வருகிறார்
சிம்பு.
கெளதம்
மேனன்
இயக்கத்தில்
சிம்பு
நடித்துள்ள
‘வெந்து
தணிந்தது
காடு’
அடுத்த
மாதம்
வெளியாகிறது.
‘விண்ணத்தாண்டி
வருவாயா’
படத்தில்
நடித்து
கெளதம்
மேனனை
சிம்பு
தான்
கை
தூக்கிவிட்டதாக
சொல்லப்படுவது
உண்டு.
விண்ணைத்தாண்டி
வருவாயா
மின்னலே
படத்தின்
மூலம்
இயக்குநராக
களமிறங்கிய
கெளதம்
மேனன்,
காக்க
காக்க,
வேட்டையாடு
விளையாடு,
வாரணம்
ஆயிரம்
என
ப்ளாக்
பஸ்டர்
படங்களை
இயக்கியிருந்தார்.
அதனைத்
தொடர்ந்து
சிம்புவுடன்
அவர்
கூட்டணி
வைத்த
‘விண்ணைத்தாண்டி
வருவாயா’
படமும்,
சிறப்பான
வரவேற்பை
பெற்றது.
இந்தப்
படத்தின்
மூலம்
ஏ.ஆர்.
ரஹ்மானும்
கெளதம்
மேனனுடன்
ஐக்கியமானார்.
அடுத்ததாக
இதே
கூட்டணியில்
‘அச்சம்
என்பது
மடமையடா’
படமும்
வெளியாகி
வெற்றிப்
பெற்றது.
மூன்றாவது
முறையாக
சூப்பர்
காம்போ
கெளதம்,
சிம்பு,
ஏ.ஆர்.
ரஹ்மான்
கூட்டணி
இணைந்து,
‘விண்ணைத்தாண்டி
வருவாயா’
படத்தின்
இரண்டாம்
பாகத்தை
கொடுக்க
வேண்டும்
என
ரசிகர்கள்
கேட்டுக்
கொண்டிருக்கின்றனர்.
ஆனால்,
அவர்களோ
இப்போது
‘வெந்து
தணிந்தது
காடு’
படத்தை
எடுத்து
முடித்துவிட்டனர்.
சிம்புவுக்கு
இந்தப்
படம்
மிகப்
பெரிய
கம்பேக்
கொடுக்கும்
என
சொல்லப்படுகிறது.
வெந்து
தணிந்தது
காடு,
செப்டம்பர்
15ம்
தேதி
வெளியாகிறது.
பத்து
தல
படத்தில்
பிசியான
சிம்பு
இதனிடையே
இன்னொரு
பக்கம்
கிருஷ்ணா
இயக்கும்
‘பத்து
தல’
படத்தில்
நடித்து
வருகிறார்
சிம்பு.
கன்னடத்தில்
வெற்றிப்
பெற்ற
‘முப்தி’
படத்தின்
தமிழ்
ரீமேக்காக
இந்தப்
படம்
உருவாகிறது.
ஆனாலும்,
தமிழ்
ரசிகர்களுக்கு
ஏற்ப
பல
மாற்றங்கள்
செய்துள்ளதாகவும்,
சிம்பு
இதில்
ஏ.ஜி.ஆர்
என்ற
கேங்ஸ்டர்
பாத்திரத்தில்
சிம்பு
நடித்து
வருகிறார்.
அவருடன்
கெளதம்
கார்த்தி,
பிரியா
பவானி
சங்கர்,
கலையரசன்
ஆகியோர்
நடிக்க,
இசைப்புயல்
ஏ.ஆர்.
ரஹ்மன்
இசையமைக்கிறார்.
வில்லனாகிப்
போன
கெளதம்
‘பத்து
தல’
படத்தின்
சூட்டிங்
வேகமாக
நடைபெற்று
வருகிறது.
சமீபத்தில்
கர்நாடக
மாநிலம்
பெல்லாரியில்
நடைபெற்ற
சூட்டிங்கில்
சிம்புவும்
கெளதம்
கார்த்திக்கும்
கலந்துகொண்டதாக
படக்குழு
அறிவித்திருந்தது.
இந்நிலையில்,
இந்தப்
படத்தில்
முக்கியமான
வில்லன்
கேரக்டரில்,
கெளதம்
மேனன்
நடிப்பதாக
தகவல்
வெளியாகியுள்ளது.
கெளதம்
மேனனின்
நெருங்கிய
நண்பராக
சிம்புவைக்
கூறலாம்.
அப்படியிருக்க
அவருக்கே
வில்லன்
வேடத்தில்
கெளதம்
மேனன்
நடிப்பது,
ரசிகர்களை
அதிர்ச்சியில்
ஆழ்த்தியுள்ளது.