கோதுமை இறக்குமதி செய்யும் திட்டமில்லை; மத்திய அரசு விளக்கம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் கோதுமை கையிருப்பு 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாகவும் இதனால், கோதுமையை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

latest tamil news

இது தொடர்பாக மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டமில்லை. உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு கோதுமை கையிருப்பு உள்ளது. பொது விநியோகத்திற்கு தேவையான கோதுமை கையிருப்பும் உணவு கழகத்திடம் உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.