தார்வாட் : ”வீர் சாவர்க்கர் உருவப்படத்தை, காங்கிரஸ் தொண்டர்கள் எரித்தது, தேச துரோக செயலாகும். ஈனத்தனமான செயல்,” என ஸ்ரீராம சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் தெரிவித்தார்.தார்வாடில் நேற்று அவர் கூறியதாவது:காங்கிரசார் எரித்தது, வீர் சாவர்க்கர் உருவப்படம் இல்லை. இந்திய தாயின் உருவப்படம். தன் வாழ்நாளின் பாதியை, சிறையிலேயே கழித்தவர். ஒரு புரட்சிகரமான தேச பக்தர். இப்படிப்பட்டவரின் உருவப்படத்தை எரித்துள்ளனர். காங்கிரசாருக்கு தேச பக்தியின் அறிவில்லையா.வீர் சாவர்க்கர் உருவப்படத்தை, காங்கிரஸ் தொண்டர்கள் எரித்தது,
தேச துரோக செயலாகும். ஈனத்தனமான செயல்.சித்தராமையா கார் மீது, முட்டை வீசியது தவறு என, அனைவரும் கூறுகின்றனர். அவர் சாவர்க்கர் பற்றி அவமதிப்பாக பேசியது தவறில்லையா. சித்தராமையா ஒரு நாத்திகர். இப்போது மடங்களுக்கு சென்று, மடாதிபதிகளின் ஆசியை பெறுகிறார். இது ஓட்டுக்காக அவர் நடத்தும் நாடகம். 60 ஆண்டுகளில் அவரது சாயம் வெளுத்துள்ளது.இவ்வாறு அவர்கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement