தைவான் நாட்டிற்கு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சமீபத்தில் வந்து சென்றதை அடுத்து சீனா தனது ராணுவ நிலைகளை தயார் படுத்தியுள்ளது.
தைவானைச் சுற்றிவளைத்து போர் பயிற்சியிலும் இறங்கிய சீன ராணுவம் ஜப்பான் நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலத்தை நோக்கியும் சில ஏவுகணைகளை வீசியது.
சீனாவின் இந்த அச்சுறுத்தலை சமாளிக்க முடிவெடுத்துள்ள ஜப்பான் தனது நாட்டின் தென் பிராந்திய தீவுகளில் 1000 கி.மீ. தூரம் வரை சென்று தாக்க கூடிய ஏவுகணைகளை நிலைநிறுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானம் மற்றும் போர்க்கப்பல்களில் இருந்து ஏவக்கூடிய சுமார் 1000 ஏவுகணைகளை நான்சி தீவில் கொண்டுவந்து இறக்கியுள்ள ஜப்பான் ராணுவம் 100 கி.மீ. வரை சென்று தாக்கக்கூடிய செயல்திறன் கொண்ட இந்த ஏவுகணைகளை 1000 கி.மீ. வரை சென்று தாக்க தேவையான மாற்றங்களை செய்துள்ளது.
இதன்மூலம் வடகொரியா மற்றும் சீன கடற்கரைகளை சென்று தாக்கக்கூடிய திறன் பெற்றுள்ளது. ஜப்பான் அரசின் இந்த நடவடிக்கை தைவான்-சீனா-வடகொரியா-ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.