தமிழகத்தில் எதிர்க்கட்சியாக விளங்கும் அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற கோஷம் உச்சம் தொட்டு, பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன்
பெரிய ட்விஸ்ட் கொடுத்து நாற்காலியை பிடித்தார். ஆனால் நீதிமன்ற வழக்குகள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக முடிய எடப்பாடி தரப்பு போட்டு வைத்த கணக்குகள் அனைத்து தூள் தூளாக மாறின. இதனை எதிர் தரப்பினர் வெகு விமர்சையாக கொண்டாடி தீர்க்க எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் ஆரம்பித்தது.
குறிப்பாக தனது சொந்த ஊரான சேலத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக ஒரு குழுவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும் எடப்பாடி கோட்டையில் அவரது செல்வாக்கு சரிந்தது என்று கூறிக் கொண்டே தேனி சென்று ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தங்கள் ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். இது எடப்பாடி பழனிசாமியின் காதுகளுக்கு எட்டியதும் பெரிதும் கோபப்பட்டதாக சொல்லப்படுகிறது.
உடனே சேலத்தில் இருந்து ரத்தத்தின் ரத்தங்கள் சென்னை புறப்பட்டு சென்று களநிலவரத்தை விளக்கினர். சேலத்தை பொறுத்தவரை இன்னும் எடப்பாடியின் கோட்டையாக தான் விளங்குகிறது எனத் தெளிவுபடுத்தினர். இதையடுத்து சட்டப் போராட்டத்திற்கு தயாராகி
தரப்பை ஒருகை பார்த்துவிடலாம் என்ற முடிவுக்கு ஈபிஎஸ் தரப்பு வந்துவிட்டது.
மறுபுறம் சமாதான முயற்சியில் ஓபிஎஸ் இறங்க எதுவும் பலனளிக்காமல் போனது. இதனால் அதிமுகவில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. இத்தகைய பரபரப்பான சூழலில் சொந்த ஊரான சேலத்திற்கு எடப்பாடி பழனிசாமி காரில் புறப்பட்டு வந்துள்ளார். சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்,
மாவட்ட செயலாளர்கள், கவுன்சிலர்கள், அதிமுக நிர்வாகிகள் என பலரும் நேரில் வந்து பூங்கொத்து வரவேற்பு அளித்தனர். எடப்பாடி பழனிசாமி உடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். மேலும் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் சால்வை மற்றும் மாலைகள் அணிவித்து வரவேற்றனர். கழகப் பொதுச் செயலாளர் என்றும், அம்மாவின் அரசியல் வாரிசு என்றும் கோஷங்கள் எழுப்பினர். அதற்கு அனைவருக்கும் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துக் கொண்டார்.