சென்னை மதுரவாயலில் பிரபல சங்கர நேத்ராலாய கண் மருதுத்துவமனையின் மருத்துவர் சுரேந்திரன் இல்லம் திருமண விழாவில் மணமக்கள் பத்ரி – இளவரசி புதுமண தம்பதிகளை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மலர் கூடை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து திரைப்பட பாடல் ஆசிரியர் வைரமுத்து மணமக்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து கூறுகையில் “நான் சென்னையை சென்னை என்று மட்டும் அழைப்பதில்லை என் இரண்டாம் அன்னை சென்னை . நான் தமிழகத்தில் தென்மேற்கு தேனி மாவட்டத்தில் கிராமத்தில் பிறந்தவன்.
18 வயதில் என்னை தத்தெடுத்தது சென்னை. பொன், பொருள், புகழ் தொழில் மட்டுமின்றி எனக்கு பெண் கொடுத்ததும் சென்னை தான். வந்தோரை வாழ வைக்கும் சென்னை. இதை சிங்கார சென்னை ஆக்கியதில் ஸ்டாலினுக்கு பெரிய பங்கு உண்டு , எங்கள் சிங்காரம் கலைந்தாலும் பரவாயில்லை சென்னையின் சிங்காரம் கலைய விடமால் காப்போம் என பணி செய்தார்.
கருணாநிதி சென்னையின் கட்டமைப்பை மாற்றினார். இந்தியாவின் தலைநகரம் எதுவானாலும் இந்தியாவிற்கு மருத்துவ தலைநகரம் சென்னைதான். சென்னை மக்கள் சென்னையின் தூய்மையை காக்க வேண்டும். சிங்கப்பூர், மெல்போர்ன், மாஸ்கோவுக்கு நிகராக கட்டமைப்பு தொழில், பண்பாடு உயர வேண்டும், கலை, இசை என்றால் சென்னைதான். சென்னையில் பிறந்தோர், வாழ்ந்தோர், இனி பிறப்போர், இங்கு வந்து சேருவோர் என அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
இலவசம் என்பது மக்களிடமிருந்து பெற்ற பணம். இந்தியா வளரும் நாடு, இந்தியா வளர்ந்த நாடாகும் வரை இலவசங்களை தவிர்க்க முடியாது.உலகின் உயர்ந்த பொருளான சூரிய ஓளி, காற்று, நீர் இலவசாக இருப்பதால் அடித்தட்டு மக்களுக்கு இலவசங்கள் கொடுப்பதில் தவறில்லை. எனது வரி உழைக்கும் மக்களுக்கு உணவாக போகிறது என்பதில் நான் பெருமை கொள்கிறேன் “.