சொகுசு பைக் ஓட்ட வேண்டும் என்ற ஆசையில், ‘யூ-டியூப்’ பார்த்து பைக் திருடிய புதுச்சேரி வாலிபர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்
புதுச்சேரி மாநிலம், சேதராப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று காலை சேதாரப்பட்டு – மயிலம் சாலையில் வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது அவ்வழியே பதிவெண் இல்லாத பைக்கில் வந்த இருவரை நிறுத்தி, பைக்கின் ஆவணங்களை கேட்டனர். இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.
சந்தேகமடைந்த போலீசார், இருவரையும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில்,புதுச்சேரி அடுத்த கூடப்பாக்கம் வசந்த் நகரைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் ஹரி (எ) பிரதாப்,27; சேதராப்பட்டில் உள்ள கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு விலை உயர்ந்த பைக் ஓட்ட வேண்டும் என ஆசை இருந்தது. அதனால், பைக் திருடுவது பற்றி ‘யூ-டியூப்’ பில் பார்த்து பயிற்சி எடுத்துள்ளார்.
பின்னர் தான் வேலை செய்யும் கம்பெனியில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த யமாகா-ஆர்.15 பைக்கை திருடிச் சென்று, தனது பப்ஜி கேம் விளையாட்டு மூலம் நண்பரான திருப்பத்துார் மாவட்டம் சத்தராயகவுண்டனுார் பகுதியை சேர்ந்த பூபதி மகன் சுதாகர்,21; என்பவரை புதுச்சேரிக்கு வரவழைத்து கொடுத்துள்ளார்.
பின்னர் இருவரும், பைக்கின் நெம்பர் பிளேட்டை கழற்றிவிட்டு சேதராப்பட்டிற்கு வந்தபோது, போலீசில் பிடிபட்டது தெரிய வந்தது.அதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் திருடி வைத்திருந்த பைக்கை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement