சென்னை:
நடிகர்
கார்த்தி
நடித்துள்ள
விருமன்
திரைப்படம்
ரிலீஸாகி
ஒரு
வாரம்
ஆன
பின்பும்
கூட
அந்தப்
படத்தின்
புரமோசன்கள்
படு
ஜோராக
நடந்து
கொண்டிருக்கிறது.
வழக்கம்
போல
பேட்டிகள்
மட்டும்
கொடுக்காமல்
இந்த
முறை
ரசிகர்களையும்
நேரில்
சந்தித்து
நிகழ்ச்சி
ஒன்றை
நடத்தி
இருக்கிறார்
கார்த்தி.
இந்நிலையில்
தான்
எவ்வாறு
நடிக்க
வந்தேன்
என்ற
கதையை
கார்த்தி
ஒரு
பேட்டியில்
பகிர்ந்துள்ளார்.
சிறு
வயதில்
முடிவு
தயாரிப்பாளர்
ஞானவேல்
ராஜா
அவர்களும்
நடிகர்
கார்த்தியும்
ஒரே
ஊர்காரர்கள்,
நெருங்கிய
குடும்ப
நண்பர்கள்.
இருவரும்
ஒன்றாகத்தான்
படித்துள்ளார்கள்.
சிறு
வயதிலேயே
தான்
தயாரிப்பாளராக
வேண்டும்
என்ற
எண்ணம்
ஞானவேல்
ராஜாவிற்கும்
தான்
நடிகராக
வேண்டும்
என்ற
எண்ணம்
கார்த்திக்கும்
உருவாகி
இருந்ததாம்.
பெரியவர்கள்
ஆனதும்
சேர்ந்து
படம்
பண்ண
வேண்டும்
நீ
நடிக்கும்
படத்தை
நான்தான்
தயாரிப்பேன்
என்று
அப்போதே
இருவரும்
பேசிக்
கொள்வார்களாம்.
சிறிய
மாற்றம்
அப்பா
சிவக்குமாரின்
சொல்லுக்கிணங்க
சென்னையில்
படிப்பை
முடித்தவுடன்
மேற்படிப்பு
படிப்பதற்காக
அமெரிக்கா
சென்று
திரும்பி
வந்தவருக்கு
நடிப்பதில்
ஆர்வம்
குறைந்து
படம்
இயக்குவதில்
ஆர்வம்
அதிகமானதாம்.
அப்போதுதான்
ஆயுத
எழுத்து
திரைப்படத்தில்
மூன்றாவது
கதாநாயகனாக
நடிப்பதற்காக
கார்த்தியை
ஆடிஷனுக்கு
அழைத்துள்ளனர்.
இயக்குநர்
மணிரத்தினத்தை
நேரில்
சந்தித்த
கார்த்தி
உங்கள்
படத்தில்
நடிப்பதற்காக
நான்
இந்த
சந்திப்பை
பயன்படுத்தி
கொள்ள
விரும்பவில்லை
உங்களிடம்
துணை
இயக்குநராக
சேர
வேண்டும்
என்று
கூற
மணிரத்தினம்
“யூ
ஆர்
வெல்கம்”
என்று
கார்த்தியை
சேர்த்துக்
கொண்டாராம்.
மூவரின்
அறிவுரை
பல
படங்களில்
கார்த்தியை
நடிக்க
கேட்டும்
அவர்
நிராகரித்துள்ளார்.
அப்போதுதான்
பருத்திவீரன்
கதையை
அமீர்
கார்த்திக்காக
கூறியதும்
முதலில்
தயங்கியுள்ளார்.
ஆனால்
நண்பர்
ஞானவேல்
ராஜா
மற்றும்
அப்பா
சிவக்குமார்
பருத்திவீரனில்
நடிக்கும்படி
அறிவுறுத்தினார்கள்.
இதனை
மணிரத்தினத்திடம்
கூறிய
போது
அவரும்
என்னை
நடிக்குமாறு
அறிவுரை
கூறினார்
என்று
கார்த்தி
கூறியுள்ளார்.
பருத்திவீரன்
அப்படித்தான்
பருத்திவீரன்
படத்தில்
நடிக்க
ஆரம்பித்தாராம்
கார்த்தி.
தனக்கு
படம்
இயக்க
வராது
என்று
நினைத்து
தான்
மணிரத்தினம்
அவ்வாறு
நடிக்கச்
சொன்னாரோ
என்று
வேடிக்கையாக
கூறியுள்ளார்.
இந்நிலையில்
முதல்
படத்திலேயே
தனது
பிரம்மாதமான
நடிப்பை
வெளிக்காட்டியிருந்த
கார்த்தி
அடுத்தடுத்து
ஆயிரத்தில்
ஒருவன்,
பையா,
சிறுத்தை,
தீரன்,
கைதி
போன்ற
வெவ்வேறு
கதாபாத்திரங்களில்
நடித்து
இன்று
தமிழ்
சினிமாவின்
தவிர்க்க
முடியாத
கதாநாயகனாக
வலம்
வந்து
கொண்டிருக்கிறார்.