தடை காலம் முடிந்தது -அதிமுக அலுவலகத்திற்கு செல்ல தொண்டர்கள் அனுமதிக்கப்படுவார்களா?

அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என நீதிமன்றம் அறிவித்திருந்த உத்தரவு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், ஜூலை 11ஆம் தேதி நடந்த வன்முறை சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட்டுள்ளதால் தொண்டர்கள் கட்சி அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை கடந்த ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, அதிமுக அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் உடன் மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. ஏராளமான நபர்கள் காயமடைந்ததுடன், கட்சி அலுவலகமும் சேதப்படுத்தப்பட்டதோடு, பொது சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அதிமுக தலைமை அலுவலக கட்டடத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

image
இதுதொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் , அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை ஈபிஎஸ் வசம் ஒப்படைக்கவும், ஒரு மாதத்திற்கு தொண்டர்கள் வரக்கூடாது எனவும் கடந்த 20ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில், அதிமுக தலைமையும் 20ம் தேதி வரை கட்சி அலுவலகத்திற்கு வரவேண்டாம் என அறிவுறுத்தியது. உயர்நீதிமன்ற உத்தரவு முடிவடைந்த நிலையில், இன்று முதல் அதிமுக தொண்டர்கள் அலுவலகத்தை பார்வையிட வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அதிமுக அலுவலகத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 15 காவலர்கள் அதிமுக அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கலவரம் தொடர்பாக காவல்துறை விசாரணை நிறைவடையாமல் உள்ளதால், அலுவலகத்திற்குள் சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் ஆதாரங்கள் களைக்கப்பட வாய்ப்புள்ள  காரணத்தால் தொண்டர்கள் கட்சி அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கட்சி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

image
மேலும், சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைத்த வழக்கு ஓபிஎஸ் சார்பில் மேல்முறையீடு செய்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தலைமை அலுவலகத்திற்கு வரமாட்டார்கள் எனவும், சொந்த ஊருக்கு சென்றதால், அவரும் அவரது ஆதரவாளர்களும் கட்சி அலுவலகத்திற்கு வரமாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல உச்சநீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்து உள்ளதாலும், அவர் தனது சொந்த ஊரில் இருப்பதாலும் அவரோ அவரது ஆதரவாளர்களோ அதிமுக அலுவலகத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை  சொல்லப்படுகிறது.
-சுபாஷ் பிரபு

இதையும் படிக்க: 7 முறை நிலைப்பாட்டை மாற்றிய ஓ.பி.எஸ் எப்படி தலைவராக முடியும்? ஆர்.பி. உதயகுமார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.