பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படாத வயற்காணிகளை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 1,05,000 ஏக்கர் காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இக்காணிகளை பெரும் போகத்தில் பயன்படுத்தும் வேலைத்திட்டத்தினை விவசாய அமைச்சு முன்னெடுத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
திருகோணமலை, அம்பாறை, அனுராதபுரம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 21500 ஏக்கர் தரிசு நிலங்களில் பயிர் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.