திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாநில செயலாளர் சிவ.இளங்கோ தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்டங்களில் மய்யம் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோனை, எதிர்கால செயல் திட்டங்கள் குறித்தும் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.
முக்கியமாக திருச்சியில் உள்ள மணல் குவாரிகளை மூடுவது குறித்தும், உத்தமர்சீலி கிராமசபை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை பங்கெடுக்க வைப்பது எனவும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஸ்ரீரங்கம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் ஆலோசனைக் கூட்டத்தில், சமீபத்தில் பெருவெள்ளம் ஏற்பட்ட நிலையில் திருச்சியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தின் ஒரு பகுதி அடித்துச்செல்லப்பட்டது. இதுபோன்ற விபத்துகளுக்கு ஆற்று மணலை வறண்டி எடுக்கும் அரசின் அலட்சியப்போக்குதான் காரணம் என்பதால் லால்குடி உத்தர்சீலி ஆற்றுமணல் ரீச்சை உடனடியாக தமிழக அரசு மூடவேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேற்படி மணல் குவாரியை மூடவேண்டி வரும் நாட்களில் உத்தமர்சீலி அல்லது இடையாற்றுமங்கலம் கிராமத்தில் நடக்கும் கிராமசபை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர்(பொறியாளர் அணி) டாக்டர் எஸ். வைத்தீஸ்வரன், மாநில இணைச் செயலாளர் ஆ.ஜெய்கணேஷ் மற்றும் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கிஷோர்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்சி தென்மேற்கு மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் நாகவேல், பொருளாளர் கருப்பையா, மாவட்ட துணை செயலாளர் பாலசுப்ரமணியன், லால்குடி ஒன்றிய செயலாளர் இளையராஜா உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல் – திருச்சி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“