தி டர்ட்டி பிக்சர்ஸ் பார்ட்- 2 படத்தில் டாப்ஸி!
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என சுமார் 450 படங்களுக்கு மேல் நடித்தவர் சில்க் ஸ்மிதா. கவர்ச்சி நடிகையாக வலம் வந்தபோதும் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமலஹாசன் என அப்போதைய முன்னணி ஹீரோக்கள் உடன் இணைந்து நடித்தவர். இந்த நிலையில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து ஹிந்தியில் ‛தி டர்ட்டி பிக்சர்ஸ்' என்ற பெயரில் ஒரு படம் உருவானது. இப்படத்தில் சில்க் வேடத்தில் வித்யா பாலன் நடித்திருந்தார்.
அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இப்போது டர்ட்டி பிக்சர்ஸ் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தில் நடித்த வித்யா பாலன்தான் இரண்டாம் பக்கத்திலும் நாயகியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது டாப்ஸி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்தியா படமாக டர்ட்டி பிக்சர்ஸ்-2 படத்தை எடுக்க திட்டமிட்டு உள்ளார்கள்.