கவுகாத்தி: அசாமில் அரசு பணியில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக தேர்வு நடைபெற உள்ளது. இதனால், அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு நடக்கும் இடங்களில் 4 மணி நேரம் இணைய சேவையை நிறுத்தி வைக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அசாம் அரசுத்துறையில் காலியாக உள்ள 27 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு நடைபெறுகிறது. இதனை எழுதுவதற்கு 14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆக., 28 முதல் செப்., 11 வரை நடக்கும் தேர்வு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஹிமாண்டா பிஸ்வா சர்மா, தேர்வில் எவ்வித சிக்கல் மற்றும் முறைகேடின்றி நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து தேர்வில் முறைகேடு நடப்பதை தடுப்பதற்காக, தேர்வு மையங்களை சுற்றி தேர்வு நடக்கும் நேரங்களில் இணைய சேவையை துண்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் மொபைல் போன் மற்றும் மின்னணு சாதனங்களை கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், தேர்வை வீடியோ மூலம் பதிவு செய்யவும் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார். தேர்வு மையங்களை சுற்றி 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement