பயங்கரவாதிகளில் ஒருவரைக்கூட ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஒப்படைக்கவில்லை.
ஒப்பந்தத்தின் முக்கியமான கோரிக்கையை செயல்படுத்தவில்லை என துருக்கி குற்றச்சாட்டு.
துருக்கிய அதிகாரிகளால் பயங்கரவாதிகளாக கருதப்பட்டவர்களில் இருந்து ஒருவரைக்கூட ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் இன்னும் ஒப்படைக்கவில்லை என துருக்கியின் நீதி அமைச்சர் பெகிர் போஸ்டாக் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையை தொடர்ந்து, ரஷ்யாவின் அண்டை நாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்து அதற்கான விண்ணப்பத்தையும் சமர்ப்பித்தனர்.
#Turkish Minister of Justice Bekir #Bozdag said that #Sweden and #Finland had not yet extradited a single person from among those considered terrorists by the Turkish authorities.
This was one of the conditions of the agreement between #Turkey, Sweden and Finland to join #NATO. pic.twitter.com/roac3Z47wa
— NEXTA (@nexta_tv) August 20, 2022
பெரும்பாலான நேட்டோ உறுப்பு நாடு இதற்கு ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில், பயங்கரவாத குழுக்களின் நடவடிக்கையை காரணம் காட்டி விட்டோ அதிகாரம் கொண்ட முக்கிய உறுப்பு நாடான துருக்கி, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளின் விருப்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து துருக்கி, பின்லாந்து, ஸ்வீடன் மற்றும் நேட்டோ அமைப்பு ஆகியவற்றிக்கு மத்தியில் நடைபெற்ற பல அடுக்கு பேச்சுவார்த்தையை தொடர்ந்து, நேட்டோவில் ஸ்வீடன் மற்றும் பின்லாந்து இணைவது தொடர்பான ஒப்பந்தத்திற்கு நிபந்தனைகளுடன் துருக்கி சம்மதம் தெரிவித்து இருந்தது.
Associated Press
இந்தநிலையில், துருக்கிய அதிகாரிகளால் பயங்கரவாதிகளாக கருதப்பட்டவர்களில் இருந்து ஒருவரைக்கூட ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் இன்னும் ஒப்படைக்கவில்லை என துருக்கியின் நீதி அமைச்சர் பெகிர் போஸ்டாக் ( Bekir Bozdag) குற்றம்சாட்டியுள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: தைவானை தொடர்ந்து சீண்டும் சீனா: அத்துமீறி நுழைந்த போர் விமானங்களால் பரபரப்பு
நேட்டோவில் இணைவதற்கான துருக்கி , ஸ்வீடன் மற்றும் பின்லாந்து இடையேயான ஒப்பந்தத்தின் நிபந்தனைகளில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதும், பயங்கரவாதிகளை ஒப்படைப்பதும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.