பெங்களூரு, : பதவிக்கு பின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா நேற்று தோல்வி அடைந்த வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆதிசுஞ்சனகிரி மடத்தின் மடாதிபதியை சந்தித்தார்.முதல்வர் பதவி போன பின், எடியூரப்பா கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்தார். தற்போது அவருக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் கட்சி நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார்.நேற்று பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில், கடந்த தேர்தலில் தோல்வி அடைந்த வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இதில் முதல்வர் பசவராஜ் பொம்மை, மாநில பா.ஜ., தலைவர் நளின்குமார் கட்டீல், தேசிய அமைப்பு செயலர் ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகள், வெற்றியின் விளிம்பு வரை வந்து தோல்வி அடைந்த தொகுதிகளில் தலைவர்கள் சுற்றுப்பயணம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
முதல்வர், மாநில பா.ஜ., தலைவர் சுற்றுப்பயணம் செய்வதற்காக தலா 50 தொகுதிகள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்களோடு முதல்வர் எடியூரப்பாவும் சுற்றுப்பயணம் செய்வார் என கூறப்படுகிறது.கூட்டத்தை முடித்த பின் பெங்களூரில் உள்ள ஆதிசுஞ்சனகிரி மடத்துக்கு எடியூரப்பா சென்று, நிர்மலானந்த சுவாமிகளை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார். பின் அவருடனும் ஆலோசனை நடத்தி உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement