பெங்களூரு : ‘மகாராஜா டி20 கோப்பை’ கிரிக்கெட் போட்டியில், மங்களூரு யுனைடெட் அணியை, 8 விக்கெட் வித்தியாசத்தில், ஷிவமொகா ஸ்டிரைக்கர்ஸ் வீழ்த்தியது.பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில், ‘மகாராஜா டி20’ கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.நேற்று நடந்த போட்டியில் முதலில் மங்களூரு யுனைடெட் அணியினர் களமிறங்கினர். முதலில் பேட் செய்த பாவலுார் (1) ரன்னில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து களமிறங்கிய சமர்த், நிகின் ஜோஸ் ஜோடி நிதானமாக விளையாடினர்.சமர்த் (12) ரன்னுக்கும், அமித் வர்மா (10) ரன்னுக்கும் ஆட்டம் இழந்தனர். அதன் பின், நான்காவது விக்கெட்டுக்கு அபினவ் மனோகர், அனைத்து திசைகளிலும் பந்துகளை அடித்து 25 பந்துகளுக்கு, 38 ரன்கள் எடுத்தார். நிகின் ஜோஸ், 37 பந்துகளுக்கு, 38 ரன்கள் எடுத்தார். கடைசியாக, 20 ஓவரில் 136 ரன்களுக்கு 8 விக்கெட்டைகளை இழந்து, மங்களூரு யுனைடெட் எடுத்தது.அதன் பின் களமிறங்கிய ஷிவமொகா ஸ்டிரைக்கர்ஸ் அணியின் சரத் (1) ரன்னுக்கும், சசிகுமார் (1) ரன்னுக்கு பெவிலியன் திரும்பினர்.
இதன் பின், ஜோடி சேர்ந்த ஸ்டாலின் ஹுவர் – கவுதம் கூட்டணி, நிதானமாக விளையாடினர். பவர் பிளேயின் போது, இருவரும் பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பினர்.கவுதம் – ஹுவர் இணைந்து 7 வது ஓவரில் 20 ரன்கள் எடுத்தனர். 8 வது ஓவரில் கவுதம் அரை சதம் கடந்தார்.அதன் பின், இருவரும் தங்கள் அதிரடியால், 13வது ஓவரில் 137 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.இதன் மூலம் மங்களூரு யுனைடெட் அணியை, 8 விக்கெட் வித்தியாசத்தில், ஷிவமொகா ஸ்டிரைக்கர்ஸ் அணி வெற்றி பெற்றது.இன்று பிற்பகல் 3:00 மணிக்கு குல்பர்கா மிஸ்டிக்ஸ் – மைசூரு வாரியர்சுக்கும்; இரவு 7:00 மணிக்கு ஹுப்பள்ளி டைகர்ஸ் – பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணிக்கும் போட்டி நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement