இன்று நம்மில் பலருக்கும் இருக்கும் பயம், இன்று கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, வயதான காலத்தில் ஆவது எந்த பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பது தான்.
அதற்காக முதலீடு செய்து வைக்க வேண்டும் என்றும் நினைப்பர். ஆனால் எத்தனை பேர் சரியாக செய்கின்றோம். எந்த திட்டத்தில் செய்கின்றோம். என்பது கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது.
இது எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்குமா? லாபகரமானதாக இருக்கிறதா? எந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். குறிப்பாக சாமானிய மக்கள் எந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்? வாருங்கள் பார்க்கலாம்.
என்ன திட்டம்
நாம் இன்று பார்க்கவிருக்கும் திட்டம் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா (PM- SYM), அரசு திட்டமான இதில் மாத மாதம் 55 ரூபாய் முதலீடு செய்தாலே, வருடத்திற்கு 36,000 ரூபாய் பென்சனாக பெற முடியும்.
இந்த திட்டம் குறைந்த சம்பளம் வாங்கு பணியாளர்களுக்கும், பெண்கள், சுயதொழில் செய்வோர் என பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக ஓட்டுனர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள், தெருவோர வியாபாரிகள், செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் போன்ற தெருவோர வியாபாரிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
மாதம் ரூ.3000 ஓய்வூதியம்ன்
இந்த திட்டத்தின் மூலம் 60 வயதுக்கு பிறகு ஒவ்வொரு மாதமும் 3,000 ருபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்திற்காக 18 – 40 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதே தகுதியான கணவன் மனைவி இருவரும் தகுதியானவர்களாக இருந்தால் 72,000 ரூபாய் பென்சனாக பெறலாம்.
எப்படி இணையலாம்?
இந்த திட்டத்தில் இணைய எந்தவொரு பொது சேவை மையத்திற்கு சென்று உங்கள் PM- SYM கணக்கினை தொடங்கிக் கொள்ளலாம். இதற்காக உங்களிடம் ஆதார் கார்டு மற்றும் வங்கி பாஸ்புக் உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்படும்.
பிரதமர் ஷ்ரம் யோகி மந்தன் யோஜனாவில் கணக்கு தொடங்கப்பட்டா பிறகு, விண்ணப்பதாரருக்கு ஷரம் யோகி அட்டையும் உடன் வழங்கப்படுகின்றது.
எவ்வளவு முதலீடு செய்யலாம்?
இந்த திட்டத்தின் கீழ் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையில் முதலீடு செய்யலாம். 18 வயதான ஒரு விண்ணப்பதார்ர் இந்த திட்டத்தில் மாதம் 55 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதே 30 வயதான ஒரு விண்ணப்பதாரர் மாதம் 100 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதே 40 வயது எனில் மாதம் 200 ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். 18 வயதில் முதலீடு செய்பவர், 42 வயது வரையில் முதலீடு செய்ய வேண்டும். 60 வயதுக்கு பிறகு ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளலாம்.
PM- SYM: 36,000 per annum pension by investing Rs.55 per month: How many years of investment?
PM- SYM: 36,000 per annum pension by investing Rs.55 per month: How many years of investment?/மாதம் ரூ.55 போதும்.. வருடத்திற்கு ரூ.36,000 பென்சன் பெறலாம்.. எப்படி தெரியுமா?