யாழில் அதிகாரிகளை அச்சுறுத்திய துப்புரவு பணியாளர்


மதுபோதையில் பணியில் ஈடுப்பட்ட துப்புரவு பணியாளருக்கு எதிராக நடவடிக்கை எடுத்த யாழ்.மாநகர சபை உறுப்பினர்
மற்றும் மேற்பார்வையாளர் மீது தாக்குதல் மற்றும் அச்சுறுத்தும் சம்பவமொன்று
இடம்பெற்றுள்ளது.

நல்லூர் ஆலய உற்சவம்

நல்லூர் ஆலய உற்சவம் இடம்பெற்றுவரும் நிலையில் நேற்று(20) அதிகாலை துப்பரவு
பணியில் ஈடுபட்ட ஊழியர் மதுபோதையில் நிற்பதை யாழ் மாநகர சபை
உறுப்பினர் அவதானித்துள்ளார்.

யாழில் அதிகாரிகளை அச்சுறுத்திய துப்புரவு பணியாளர் | Cleaning Worker Threatened The Authorities Jaffna

இதையடுத்து குறித்த துப்புரவு பணியாளரை மறுநாள் கடமையில்
ஈடுபடுமாறும் மதுபோதையில் இருந்து பணியில் ஈடுபட வேண்டாம் எனவும் கூறுமாறு
மேற்பார்வையாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

யாழ்.மாநகர சபையின் நடவடிக்கை

இந்நிலையில் யாழ்.மாநகர சபை
உறுப்பினரின் அறிவுறுத்தல்களை, மேற்பார்வையாளர், துப்புரவு பணியாளரிடம் தெரிவித்ததையடுத்து அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

யாழில் அதிகாரிகளை அச்சுறுத்திய துப்புரவு பணியாளர் | Cleaning Worker Threatened The Authorities Jaffna

மேலும் குறித்த பணியாளர்
மாநகர சபை உறுப்பினர் மற்றும் மேற்பார்வையாளரை அச்சுறுத்தும் தாக்குதல்
முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து துப்புரவு பணியாளருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ள யாழ்.மாநகர சபை அவரை பணியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை
எடுத்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.