ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மோசமான முதலீடு எது தெரியுமா.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்ததை பாருங்க!

இந்தியாவின் முன்னணி வணிக குழுமமான மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, சமூக வலைதளங்களில் எப்போதும் படு பிசியாக இருப்பவர். தன்னை சுற்றி நடக்கும் சுவாரஷ்யமான, பயனுள்ள விஷயங்களை பகிர்பவர்.

பலருக்கும் சமூக வலைதளம் மூலமாகவே உதவியினை செய்து வருபவர்.

தற்போது பிக் புல் என்று பாசமாக அழைக்கப்பட்டு வந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் அட்வைஸ் குறித்து, தனது கருத்தினை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அடி சக்க.. தங்கம் விலை குறையுமா.. ஏன் என்ன காரணம்.. கவனிக்க வேண்டிய 5 முக்கிய காரணிகள்..!

சன்டே தாட்ஸ்

சன்டே தாட்ஸ்

சன்டே தாட்ஸ் என்று அழைக்கப்படும் ஒரு ட்வீட்டின் மூலம் அதனை பதிவிட்டுள்ளார்.

ராகேஷ் ஜுன் ஜுன்வாலா செல்வத்தை உருவாக்குவது பற்றி அடிக்கடி பேசினார். புதியதாக பங்கு சந்தைக்குள் நுழைபவர்கள், நிபுணர்கள், பங்கு சந்தை முதலீடு தொடர்பான அறிய விரும்புவர்கள் என பலரும் அவரை தொடர்ந்து வந்தனர். அவரிடம் தீவிர ஆலோசனையும் நடத்தி வந்தனர்.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பற்றி

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பற்றி

இது குறித்து ஆனந்த் மஹிந்திரா, இந்தியாவின் வாரன் பஃபெட் மிகவும் லாபகரமான முதலீட்டு ஆலோசனைகளை கொடுத்தவர். அவரது வாழ்வின் கடைசி கட்டத்தில் கூட லாபகரமான மற்றும் மதிப்புமிக்க முதலீட்டு ஆலோசனையை வழங்கினார். இதன் மதிப்பு பில்லியன் கணக்கில் இருக்கும். இது சிறந்த பகுதி. இதற்கு நீங்கள் உங்கள் நேரத்தினை முதலீடு செய்யுங்கள். உங்கள் பணத்தை அல்ல என்றும் கூறியுள்ளார்.

மரணம் குறித்து
 

மரணம் குறித்து

எனது மோசமான முதலீடு என்பது எனது ஆரோக்கியம் தான். அதில் அனைவரையும் முதலீடு செய்ய ஊக்குவிப்பேன் என்று ராகேஷ் ஜுன்ஜுன்வாலா கூறியதை நினைவு கூர்ந்துள்ளார்.

ரகேஷ் ஜுன் ஜுன்வாலா மரணம் குறித்து பேசிய ஒரு அறிக்கையில், கடந்த 2012ம் ஆண்டில் 50 வயதில் ஒருவரின் ஆயுட்காலம் தடைபட்டதாக கூறியுள்ளார். தினசரி 6 பெக் விஸ்கி, 25 சிகரெட் துண்டுகள், உடற்பயிற்சியின்மை மற்றும் பன்றியை போல் சாப்பிடுவது போன்ற காரணங்களால் இருக்கலாம் என்றும் கூறியிருந்தார்.

எப்படி பணக்காரராக இருப்பது?

எப்படி பணக்காரராக இருப்பது?

ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவிடம் வளரும் நாட்டில் எப்படி பணக்காரராக இருப்பது என்பது குறித்து கேள்வி எழுப்பட்டது. இந்தியா ஏழை நாடு அல்ல, ஏனெனில் இது பணக்கார கலாச்சார நாடு. சுவையான உணவுகள், ஏராளமான இயற்கை வளங்கள் உள்ள நாடு. அதி நவீன சிந்தனை முறைக்கு கூடுதலான ஒரு சிறப்பான திரைப்படத் துறையை கொண்ட நாடு என்றும் கூறியிருந்தார்.

இந்தியா பணக்கார நாடு

இந்தியா பணக்கார நாடு

இந்தியா பணக்கார நாடாக இல்லாவிட்டால், தான் பணக்காரராக இருந்திருக்க முடியாது என அவர் நம்பபினார். 1985ல் அவர் பங்கு வர்த்தகத்தினை தொடங்கிய போது, இன்டெக்ஸ் வெற்றும் 112 புள்ளிகளே இருந்தன. ஆனால் இன்று 2012 காலகட்டத்தில் 20,000 புள்ளிகளாக இருந்தது. அதன் மூலம் நாட்டின் வளர்ச்சியினை அவர் கண்டார். இந்தியா அந்தளவுக்கு வளர்ச்சி கண்டிருக்க வில்லை எனில், அவர் முதலீடு செய்திருக்க மாட்டார் என்றும் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.

இறப்பு

இறப்பு

கடந்த ஆகஸ்ட் 14ம் தேதியன்று காலை திடீரென பங்கு ராகேஷ் ஜுன் ஜுன்வாலா மாராடைப்பால் காலமானர். அவரின் வயது 62. அவர் கூறியது போல அவரின் உடல் நலத்தில் அதிகம் முதலீடு செய்யாமல் விட்டதே அவரின் மரணத்திற்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது போலும். ஏனெனில் அவருக்கு ஏற்கனவே சிறு நீரக பிரச்சனைகள் உள்பட பல பிரச்சனைகள் இருந்தன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rakesh jhunjhunwala’s important advice: Anand mahindra

Rakesh jhunjhunwala’s important advice: Anand mahindra/ ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மோசமான முதலீடு எது தெரியுமா.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்ததை பாருங்க!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.