ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனையானது 6 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று வரையில் முடிந்தபாடாக இல்லை. ஏற்கனவே சர்வதேச அளவில் இதன் தாக்கம் மோசமான தாக்கம் இருந்து வரும் நிலையில், இனி என்னவாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஏற்கனவே சப்ளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விலைவாசியானது, பல வருடங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. இதன் காரணமாக பணவீக்கம் என்பது தலைவிரித்தாடி வருகின்றது.
இது சர்வதேச அளவில் பொருளாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் வருகிறது ஜியோ 5ஜி போன்.. விலை எவ்வளவு? 5ஜி ஃபியூச்சர் போன் வருமா?
மேற்கத்திய நாடுகளின் தடை
மேற்கத்திய நாடுகள் பலவும் ரஷ்யாவின் மீது தடையை விதித்துள்ளன. மீண்டும் தடையை விதிக்க திட்டமிட்டு வருகின்றன. ஏற்கனவே விதிக்கப்பட்ட தடைகளின் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் விலையானது உச்சத்திற்கு சென்றது. எனினும் தற்போது சற்று குறையத் தொடங்கியுள்ளது. இது பெரியளவில் குறைய வாய்ப்பில்லை என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெர்மனியின் முடிவு
ஜெர்மனி கேஸ் சப்ளையில் தடை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்டீல் தயாரிப்பில் இருந்து பார்மா வரையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதனால் பல தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்படலாம். இது மேற்கொண்டு சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சி
ஏற்கனவே கொரோனாவின் காரணமாக உலகளாவிய அளவில் வர்த்தகம் சீர்குலைந்து, தற்போது தான் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையானது மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதனால் உலகின் பெரும்பாலான நாடுகள் பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். பணவீக்கம் உந்தப்படலாம். செலவுகள் அதிகரிக்கலாம்.
ரெசசனை எதிர்கொள்ளலாம்
பல்வேறு நாடுகளின் அரசும் ஏற்கனவே தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளன. வணிகமும் பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதாரம் சுருங்கத் தொடங்கியுள்ளது. பணவீக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. விலைவாசி ராக்கெட் வேகத்தில் அதிகரித்துள்ளது. இது இன்னும் சில காலத்திற்கு நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பல நாடுகளும் ரெசசசனை எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் சில காலம் தொடரலாம்
உணவு பொருட்கள் விலை மற்றும் பற்றாக்குறை, உரங்கள், தானியங்கள் என பலவும் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சனையானது தற்போது முடிவுக்கு வந்தாலும், இன்னும் சில காலம் இதே நிலை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கல் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி விகிதத்தில் தாக்கம் இருக்கலாம்
இது மத்திய வங்கிகளை மேற்கொண்டு வட்டி விகிதத்தினை அதிகரிக்க உந்தப்படலாம். விலைவாசி ஏற்றத்தில் இருக்கலாம். இது வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். பணவீக்கமும் அதிகரிக்கலாம். முன்னணி பொருளாதார நாடுகள் கூட தாக்கத்தினை எதிர்கொள்ளலாம்.
நடப்பு ஆண்டில் சர்வதேச பொருளாதாரம் 6% சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Russia’s war at 6 months: The impact on the global economy could be dire
Russia’s war at 6 months: The impact on the global economy could be dire/6 மாதமாக நடக்கும் போர்.. சர்வதேச பொருளாதாரத்திற்கு காத்திருக்கும் சவால்கள்..!