900 பேரை வீட்டுக்கு அனுப்பிய ஜியோமி.. அச்சத்தில் ஊழியர்கள்..!

உலகின் டெக் ஜாம்பவானகளில் ஒன்றாக ஜியோமி நிறுவனம் கடந்த காலாண்டில் கண்ட மெதுவான வளர்ச்சிக்கு பிறகு, பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுவாக கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவில் நிலவி வரும் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் , சீன நிறுவனங்கள் மெதுவான வளர்ச்சியினை கண்டு வருகின்றன.

சீனா நிறுவனங்கள் மட்டும் அல்ல, உலகின் பல்வேறு டெக் ஜாம்பவான்களும், முதல் காலாண்டில் இருந்தே மெதுவாக வளர்ச்சியினை கண்டு வருவதாக கூறி வரும் நிலையில் பணி நீக்கமும் செய்துள்ளன. பணியமர்த்தலையும் குறைத்து வருகின்றன.

இந்தியா சீனா மட்டும் அல்ல.. மியான்மரும் இனி அப்படி தான்.. கடுப்பில் மேற்கத்திய நாடுகள்!

900 பேர் பணி நீக்கம்

900 பேர் பணி நீக்கம்

இதற்கிடையில் தான் ஜியோமி நிறுவனமும் தனது ஊழியர்களில் 900 பேரை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஜியோமி அதன் மொத்த ஊழியர் தொகுப்பில் 3% பேரை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருவாய் சரிவு

வருவாய் சரிவு

எனினும் முழுமையாக எத்தனை பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறித்தான தகவல்கள் ஏதும் இல்லை. சீனாவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில், இந்த பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மந்த நிலைக்கு மத்தியில் அதன் வருவாய் விகிதம் மோசமான அளவில் சரிவினைக் கண்டுள்ளதாகவும், இது சுமார் 20% சரிவினைக் கண்டிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்த ஊழியர்கள்
 

மொத்த ஊழியர்கள்

ஜுன் 30 நிலவரப்படி, ஜியோமி 32,869 முழு நேர ஊழியர்களை கொண்டுள்ளது. அதில் 30,110 பேர் சீனாவில் பணி புரிபவர்கள். மீதமுள்ள பணியாளர்கள் இந்தியா மற்றும் இந்தோனேஷியாவில் பணிபுரியக்கூடியவர்கள்.

காலாண்டு அறிவிப்புக்கு பிறகு, அதன் தலைவர் வாங் சியாங், அதிகரித்து வரும் உலகளளாவிய பணவீக்கத்திற்கு மத்தியில், அன்னிய செலவாணியும் ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றது.

அரசியல் பிரச்சனை

அரசியல் பிரச்சனை

இதற்கிடையில் பதற்றமான அரசியல் சூழல் நிலவி வருகின்றது. இதனால் தொழிற்துறையானது மோசமான பிரச்சனையை எதிர்கொண்டுள்ளது. இந்த சவால்கள் ஒட்டுமொத்த சந்தை தேவையை குறைத்துள்ளன. இது எங்களின் நிதி முடிவுகளை கணிசமாக பாதித்துள்ளது என்று சியாங் கூறியுள்ளார்.

டெக் ஜாம்வான்கள் பணி நீக்கம்

டெக் ஜாம்வான்கள் பணி நீக்கம்

உண்மையில் ஜியோமி மட்டும் அல்ல, இன்று உலக நாடுகளில் உள்ள பல நிறுவனங்களும் வளர்ச்சியில் தாக்கத்தினை எதிர் கொண்டுள்ளன. இதனால் பல்வேறு டெக் நிறுவனங்கள், கார்ப்பரேட்கள் பலவும் மெதுவான வளர்ச்சியினை காணத் தொடங்கியுள்ளன. அவர்கள் வளர்ச்சியினை தக்க வைத்துக் கொள்ள பணி நீக்கம் செய்ய தொடங்கியுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

china’s Xiaomi lay off over 900 employees after weak results

china’s Xiaomi lay off over 900 employees after weak results/900 பேரை வீட்டுக்கு அனுப்பிய ஜியோமி.. அச்சத்தில் ஊழியர்கள்..!

Story first published: Sunday, August 21, 2022, 22:05 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.