அதிமுக பொதுக்குழு தீர்ப்பு – இபிஎஸ் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், அதிமுக-வில் ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.