இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் சக்தி செளந்தர் ராஜன். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு பிரசன்னா நடிப்பில் வெளியான நாணயம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து சிபிராஜ் நடித்த நாய்கள் ஜாக்கிரதை படத்தை இயக்கிய அவர், அப்படத்தில் நாய்க்கும் மனிதனுக்கும் இடையேயான அன்பை நேர்த்தியாக கூறப்பட்டிருந்ததால் படமும் நல்ல வெற்றி பெற்றது. இதனால் சக்தி சௌந்தர்ராஜன் மீது பலருக்கும் எதிர்பார்ப்பு எகிறியது. அந்த சூழலில் ஜெயம் ரவியை வைத்து மிருதன் என்கிற ஜாம்பி படத்தை இயக்கினார். தமிழில் வெளியான முதல் ஜாம்பி படம் இதுவென்றாலும் ரசிகர்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. அதேபோல் விண்வெளியை மையமாக வைத்து இயக்கிய டிக் டிக் டிக் படமும் தோல்வியடைந்தது.
அதனைத் தொடர்ந்து ஆர்யாவுடன் இணைந்த சக்தி சௌந்தர்ராஜன் டெடி படத்தை இயக்கினா. தற்போது மீண்டும் ஆர்யாவுடன் கைகோர்த்திருக்கும் சக்தி தற்போது கேப்டன் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
Happy to launch the intriguing Trailer of #Captain https://t.co/t9T3o4Gv3p
Best wishes to @arya_offl & whole Team.#CaptainonSep8th@ShaktiRajan @SimranbaggaOffc #AishwaryaLekshmi @immancomposer @ramjowrites @ThinkStudiosInd @SreshthMovies @Gangaentertains @thinkmusicindia
— nithiin (@actor_nithiin) August 22, 2022
‘கேப்டன்’ திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. “கேப்டன்” திரைப்படம் செப்டம்பர் 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ராணுவ வீரர்கள் எதிர்க்கொள்ளும் சவால்களை மையப்படுத்தி வெளியாகி இருக்கும் ‘கேப்டன்’ படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி ஏலியன் கதாபாத்திரங்களும் படத்துக்குள் இருக்கும் என்ற எண்ணத்தை ட்ரெய்லர் தூண்டிவிட்டிருக்கிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.