இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ஐஎஸ் தற்கொலைப்படை பயங்கரவாதியை ரஷ்யா கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் பயங்கரவாதிகள் பல்வேறு நாச வேலைகளை செய்ய திட்டமிடுவதால் பாதுகாப்பு தீவிரமாக்கப்பட்டு உள்ளது. தலைநகர் டெல்லி, மும்பை போன்ற இடங்களில், கடந்த சில நாட்களாகவே, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இந்தியாவின் தலைமை உயர் பதவி வகிக்கும் முக்கிய நபருக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய ஐஎஸ் பயங்கரவாத குழுவை சேர்ந்த ஒரு பயங்கரவாதியை ரஷ்ய அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
‘பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர் மணீஷ் சிசோடியா!’ – அரவிந்த் கெஜ்ரிவால் புகழாரம்!
கைதான பயங்கரவாதி, இந்தியாவின் ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய நபருக்கு எதிராக தற்கொலைப்படை தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது என ரஷ்ய கூட்டாட்சி பாதுகாப்பு சேவை (எப்.எஸ்.பி) தெரிவித்துள்ளது.
அந்த நபர் துருக்கியில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத குழுவின் தலைவர்களில் ஒருவரால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தேர்வு செய்யப்பட்ட நபர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கைது நடவடிக்கை நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் முக்கிய தலைவர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.