இந்தியாவில் 9,531 ஆக குறைந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் நேற்று 11,539 ஆக இருந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு, கடந்த 24 மணி நேரத்தில் 9,531 ஆக குறைந்தது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,531 பேருக்கு கோவிட் தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,43,48,960 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில் 11,726 பேர் நலமடைந்து வீடு திரும்பினர். இதுவரை கோவிட் தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4,37,23,944 ஆனது. தற்போது 97,648 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கோவிட் காரணமாக மேலும் 36 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,27,368 ஆக உயர்ந்தது. இதுவரை 210.02 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் கடந்த 24 மணிநேரத்தில் 35,33,466 டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.