ஆனந்தம் படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் லிங்குசாமி. தொடர்ந்து அவர் இயக்கிய ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட படங்கள் கோலிவுட்டில் மிகப்பெரிய ஹிட்டடித்தன. அதனையடுத்து அவர் இயக்கிய அஞ்சான் படம் தோல்வியடைந்தது. அதுமட்டுமின்றி அவர் கடுமையாக ட்ரோலும் செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் கார்த்தியையும், சமந்தாவையும் வைத்து எண்ணி ஏழு நாள் என்ற படத்தை இயக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
அதற்காக அவர் நான் ஈ, இரண்டாம் உலகம் படங்களை தயாரித்த பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து 1.03 கோடி ரூபாய் கடனாக பெற்றிருக்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசம்காக எண்ணி ஏழு நாள் படம் சில பிரச்னைகளால் ஆரம்பிக்கப்படாமல் போக பிவிபி நிறுவனம் லிங்குசாமியிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதாகவும், அப்போது லிங்குசாமி காசோலையை கொடுத்ததாகவும் தெரிகிறது.
ஆனால் பணம் இல்லாததால் லிங்குசாமி கொடுத்த செக் பவுன்ஸ் ஆனது. இதனால் அதிர்ச்சியடைந்த பிவிபி நிறுவனம் லிங்குசாமி மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம், லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதனால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Saidapet Court has issued a 6 months jail sentence for Director #Lingusamy.
Further, @dirlingusamy side has appealed at the court.
— KARTHIK DP (@dp_karthik) August 22, 2022
அதேசமயம், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படுமென லிங்குசாமி தரப்பு கூறியுள்ளார். லிங்குசாமி கடைசியாக தி வாரியர் என்ற படத்தை இயக்கியிருந்தார்.