இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம்.
அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 இலங்கையில் எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்குள் தமிழர் ஒருவர் பிரதமராகலாம் அல்லது ஜனாதிபதி ஆகலாம் என்ற காலகட்டம் வரப் போகின்றது என பிரபல எண்கணித ஜோதிடர் செல்வன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>> 2027இல் தமிழர் ஒருவரே இலங்கையின் பிரதமர்! ஜனாதிபதியாகவும் ஆகலாம்: இந்திய ஜோதிடரின் கணிப்பு(Video)
2 கடந்த மே 9 ஆம் திகதி முதல் ஜூலை 12 ஆம் திகதி வரை நாட்டுக்குள் நடந்த வன்முறைகள் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்காக உடனடியாக ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் படிக்க >>>நாட்டுக்கு எதிரான சூழ்ச்சிகள்! உதய கம்மன்பிலவிடம் உள்ள சாட்சியங்கள்
3 கம்பஹா, பியகம பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையில் இளைஞர்கள், யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றுகாலை பேஸ்புக் ஊடாக நண்பர்களாகியவர்கள் நடத்திய விருந்தில் ஈடுபட்ட யுவதிகள் உட்பட 14 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் படிக்க >>>ஹோட்டலில் பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு – கொழும்பை சேர்ந்த பல இளைஞர், யுவதிகள் கைது
4 கொழும்பில் உள்ள பிரதான வங்கியின் ATM அட்டையில் பணம் பெற முயற்சிக்கும் நபர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகுவதாக தெரியவந்துள்ளது.
ATM அட்டையில் பணம் பெற முயற்சித்து பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வெளியிட்ட தகவலுக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க >>>ATM அட்டை பயன்படுத்துவோருக்கான தகவல் – யாழ். செல்ல தயாரானவருக்கு நேர்ந்த பாதிப்பு
5 பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யக் கோரியும், காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் பொலிஸாரினால் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதற்கு எதிராகவும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும் படிக்க >>>கொழும்பில் மீண்டும் களமிறங்கிய காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் (Video)
6 அனைத்துக் கட்சி அரசாங்கம் யதார்த்தமானதாக இல்லாவிட்டால் புதிய அமைச்சரவையை கூடிய விரைவில் நியமிக்க வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>>ரணிலுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம்! பசிலின் அறிவிப்பு
7 அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது டொலரின் பெறுமதியில் சிறிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க >>>டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி! ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு
8 உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அதன்படி தங்க விலையில் சிறிது சரிவு காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க >>>தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! கொழும்பில் பதிவாகியுள்ள நிலவரம்
9 புதிதாக நியமிக்கப்படும் நாடாளுமன்ற துறைசார் கண்காணிப்பு தெரிவுக்குழுவின் தலைவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கு நிகரான அதிகாரத்தை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
மேலும் படிக்க >>>ஜனாதிபதியின் மற்றுமொரு தீர்மானம்:உருவாக்கப்படும் அமைச்சருக்கு நிகரான அதிகாரமிக்க பதவி
10 கடந்த இரு தசாப்தகால அனுபவத்தின்படி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் ஜனநாயகவெளி ஒப்பீட்டளவில் அதிகரிப்பதுண்டு. எனினும் இம்முறை அவர் அதிஷ்ட லாபச் சீட்டில் ஜனாதிபதியாக வந்ததும் தென்னிலங்கையில் ஜனநாயகவெளி ஒப்பீட்டளவில் சுருங்கியது எனலாம்.
மேலும் படிக்க >>>புலம்பெயர்ந்த தமிழர்களால் நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்க முடியுமா..!