தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சற்று சரிவில் காணப்படுகிறது.
சர்வதேச அளவில் நிலவி வரும் மேக்ரோ பொருளாதார நிலைக்கு மத்தியில் தங்கம் விலையானது, அதிக ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றது. குறிப்பாக பணவீக்கம் அதிகரிப்பு, வட்டி விகிதம் அதிகரிப்பு, பணப்புழக்கம் சரிவு, அரசியல் பதற்றங்கள் என பல காரணிகளும் தங்கத்தின் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றன.
குறிப்பாக உக்ரைன் ரஷ்யா இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் தங்கம் விலையானது 2071 டாலர்களை உடைத்து சென்றது.
அடி சக்க.. தங்கம் விலை குறையுமா.. ஏன் என்ன காரணம்.. கவனிக்க வேண்டிய 5 முக்கிய காரணிகள்..!
தங்கத்திற்கு ஆதரவு
பல வருங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கமானது உச்சம் தொட்டது. இதற்கிடையில் பங்கு சந்தை மற்ற, ரிஸ்கான முதலீடுகளில் இருந்து முதலீடுகளானது வெளியேறியது. இதன் காரணமாக பங்கு சந்தைகள் பலத்த சரிவினைக் கண்டன. தங்கம் விலையானது புதிய உச்சத்தினை எட்டியது. எனினும் தேவையும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தியது.
குறைந்த விலையில் வாங்க தூண்டலாம்
தங்கம் விலை முக்கியமாக இரண்டு காரணிகளினால் இயக்கப்படுகிறது.ஒன்று சுரங்கம் மற்றும் ஸ்கிராப் சப்ளை, நகை தேவை மற்றும் தேவையால் தீர்மானிக்கப்படுகின்றது. இந்தியாவினை பொறுத்தவரையில் இந்திய வாடிக்கையாளர்கள் சரிவினைக் வரவேற்கின்றன. ஆக இது தங்கத்தினை குறைந்த விலையில் வாங்க முதலீட்டாளர்களை தூண்டலாம்.
1800 டாலர்களுக்கு கீழ்
இது தொடர்ந்து 1800 டாலர்களுக்கு கீழாகவே காணப்படுகின்றது. இது இன்னும் தங்கம் விலை குறையலாம் என்ற உணர்வினையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து கடந்த 5 அமர்வுகளாகவே தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வரும் நிலையில், இன்று 1750 டாலர்கள் என்ற லெவலில் காணப்படுகின்றது. இது தொடர்ந்து இந்த லெவலுக்கு கீழாக தொடர்ந்து வர்த்தகமாகினால் மேற்கோண்டு அழுத்தம் காணலாம்.
ரெசசன் அச்சம்
மீடியம் டெர்மில் தங்கம் விலை குறைந்தாலும், நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம். ஆக தங்கம் விலையானது குறைந்த விலைக்கு கிடைக்கும்போது வாங்கி வைக்கலாம். இது முதலீட்டாளர்களுக்கு சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. இது நிலவி வரும் அரசியல் பதற்றங்கள், நுகர்வோர் விலை குறியீடு,பொருளாதாரம் குறித்த குறியீடுகள் கவனிக்க வேண்டியன் விஷயங்களாக உள்ளன.
சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்?
தங்கம் விலையானது தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 4.85 டாலர்கள் குறைந்து, 1758.05 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது இன்னும் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதே வெள்ளி விலையும் 0.56% குறைந்து, 18.957 டாலராக காணப்படுகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையில் தங்கம் விலையானது தற்போது 10 கிராமுக்கு 137 ரூபாய் குறைந்து, 51,342 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே வெள்ளி விலையும் கிலோவுக்கு 345 ரூபாய் குறைந்து, 55,151 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. சர்வதேச சந்தையில் விலை தடுமாறும் நிலையில், இந்திய சந்தையிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்படும் நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று குறைந்து தான் காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, 4815 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 38,520 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 17 ரூபாய் குறைந்து, 5253 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 42,024 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 136 ரூபாய் குறைந்து, 52,530 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
இதே ஆபரண வெள்ளி விலை இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 20 பைசா குறைந்து, 61.10 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 611 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து, 61,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று – ரூ.48,150
மும்பை – ரூ.47,600
டெல்லி – ரூ.47,750
பெங்களூர் – ரூ.47,650
கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.48,150
gold price on 22nd August 2022: what really moves gold prices?
gold price on 22nd August 2022: what really moves gold prices?/உண்மையில் தங்கம் விலையில் என்ன தான் நடக்குது.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?