ஒரே சேலையில் வாழ்க்கையை முடித்து கொண்ட காதல்ஜோடி!!

நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் உள்ள சிதம்பரநகர்…. இதே பகுதியில் வசித்துவருபவர் முத்துலட்சுமி. கணவரை இழந்து தனது இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்தார். சம்பவத்தன்று துணிக்கடைக்கு வேலைக்கு சென்ற முத்துலட்சுமி, இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவுகள் திறந்து கிடந்தது. உள்ளே சென்ற பார்த்த முத்துலட்சுமி, அதிர்ச்சியில் உடைந்து போனார். தன்னுடைய இளைய மகள், 21 வயதான உமா கவுரி தூக்கில் பிணமாக தொங்கியிருந்தார். அவருடன் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர், மகள் தொங்கிய அதே சேலையில் பிணமாக தொங்கியிருந்தார்.

பார்த்ததும் பதறிப்போனவர், சத்தம் போட்டு கத்தி கூச்சலிட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். உடனே சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோட்டார் போலீசார் முத்துலட்சுமியின் வீட்டிற்கு விரைந்து வந்தனர். தூக்கில் தொங்கிய இருவரையும் கீழிறங்கி உடலை ஆய்வு செய்ததில் இருவரும் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. பின்னர், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதனை அடுத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், உமா கவுரியுடன் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர் யார் ? எதற்காக அவர்கள் இருவரும் தற்கொலை செய்துகொண்டார்கள் ? என்ற கோணத்தில் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். ஒரு கட்டத்தில் இருவரின் தற்கொலைக்கான காரணங்கள் வெளிச்சமானது. உமாகவுரி,மோகன் இருவரின் உயிரையும் காவு வாங்கியது, காதல்.

 தூக்கிட்டு தற்கொலை, காதல்ஜோடி, இளம்ஜோடி தற்கொலை, காதலர்கள் தற்கொலை, காதல்ஜோடி தற்கொலை,இளம்ஜோடி தற்கொலை, முத்துலட்சுமி,வழக்குப்பதிவு,ஒரே சேலையில்,தூக்கிட்டு தற்கொலை

உயிரிழந்த உமா கவுரியின், தந்தை இறப்பதற்கு முன்வரை குடும்பத்தோடு குமரி மாவட்டம் மருங்கூர் அருகே வசித்து வந்தனர். அப்போது உமாகவுரிக்கும் மருங்கூர் ராமபுரம் பகுதியைச் சேர்ந்த 24 வயதான மோகன் என்ற இளைஞருக்கும் காதல் ஏற்பட்டது. தந்தையை இழந்து குடும்பத்தோடு இடம் மாறிய பிறகும் மோகன், உமாவை மறக்கவில்லை. தொடர்ந்து காதலர்கள் இருவரும் காதலித்து வந்தனர். 

நாட்கள் பல கடந்தோட உமா கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார். மோகன், நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்கிடையே இருவருக்குள்ளேயும் என்ன ஆனது என்று தெரியவில்லை. சம்பவத்தன்று காதலியை பார்ப்பதற்காக மோகன், உமாகவுரியின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். வீட்டில் உமா கவுரியின் தாயாரும், சகோதரியும் இல்லாமல் போனார்கள். அப்போதுதான் ஒரே சேலையில் காதலர்கள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். 

இதனையடுத்து உயிரிழந்த இருவரின் குடும்பத்தினரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை முடிவை எடுத்தார்களா? இல்லை வேறு ஏதேனும் காரணமா உண்டா என்ற கோணத்தில் விசாரணை நீடித்து வருகிறது. விசாரணையில் முடிவில்தான் உமாகவுரி, மோகன் இருவரின் தற்கொலைக்கும் விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற கீழ்காணும் எண்ணை தொடர்பு கொள்ளவும். மாநில உதவிமையம்: 104

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.