இந்தியாவின் வாகனத் துறை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4%, உற்பத்தி ஜிடிபி-யில் 35% மற்றும் ஜிஎஸ்டி பங்களிப்பில் 1.5 லட்சம் கோடி பங்களிக்கிறது.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறைக்கு வந்ததிலிருந்து, ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தனது தயாரிப்புக்கான கார் விலையை இந்தியா முழுவதும் ஒரே எக்ஸ்-ஷோரூம் விலைக்கு மாறியது.
இதற்கு முன்பு இது உள்ளூர் வரிகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திற்குப் பல்வேறு வாகன விலைகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஓரே இந்தியா ஓரே வரி என்ற கருத்துத் தற்போது வெளியாகியுள்ளது. இதை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளுமா..?
ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல்…. தொடர்ந்து 5வது மாதமாக சாதனை!
ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி-க்கு பின்பு கார்களின் விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாவிட்டாலும், சாலை வரி ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் பல தங்களது சொந்த மாநிலத்தைக் காட்டிலும் வேறு மாநிலத்தில் கார் வாங்கிச் சில ஆயிரங்களைச் சேமிக்கின்றனர்.
வேறு மாநில கார்
ஆனால் ஒரு மாநிலத்தில் வாங்கப்பட்ட காரை வேறு மாநிலத்தில் ஓட்ட சில காலத்திற்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, ஆனால் நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் பிரச்சனை தான். இதைச் சமாளிக்க மீண்டும் வாகனம் பயன்படுத்தும் மாநிலத்தில் வாகனத்தை ரிஜிஸ்டர் செய்யப்பட்டுச் சாலை வரி செலுத்த வேண்டும்.
சாலை வரி
இதேவேளையில் ஒவ்வொரு மாநிலத்திலும் சாலை வரி மாறுபடுவது வாகன உரிமையாளர்களுக்குப் பெரும் பிரச்சனையாக உள்ளது, குறிப்பாக அடிக்கடி வேலையை மாற்றுபவர்களுக்கு இது முக்கியப் பிரச்சனையாக இருக்கிறது.
ஜிஎஸ்டி-க்கு பின்பு கார்களின் எக்ஸ் ஷோரூம் விலை இந்தியா முழுவதும் ஒன்றாக இருந்தாலும் சாலை வரி ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுப்படுகிறுத. உதாரணமாக
மாருதி சுசூகி வேகன் ஆர்
மாருதி சுசூகி வேகன் ஆர் LXI வேரியன்ட் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.547,500 ஆகும். இக்காருக்கு ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் சாலை வரி ரூ.76,650 ஆக உள்ளது. இதன் மூலம் ஆன்ரோடு விலை ரூ.668,784 நிலையில் உள்ளது. இதேவேளையில் புதுச்சேரியில் சாலை வரி இந்தக் காருக்கு வெறும் ரூ.11,000 ஆக உள்ளது இன் மூலம் ஆன்ரோடு விலை ரூ.588,108 ஆக மட்டுமே உள்ளது.
சாலை வரி கணக்கீடு
பொதுவாகச் சாலை வரி என்பது எஞ்சின் திறன், இருக்கை திறன், ஏற்றப்படாத எடை, விலை போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் விதிக்கப்படுகிறது. ஆனால் இது ஒவ்வொரு மாநிலத்தின் வர்த்தக முறை, ஆட்டோமொபைல் சந்தை விற்பனை அடிப்படையில் மாறுபடுகிறது.
வரி விதிப்பில் வித்தியாசம்
சில மாநிலத்தில் தனியார் மற்றும் நிறுவன வாகனங்களுக்கு மாறுபட்ட வரி விதிப்பு, இன்னும் சில மாநிலத்தில் வாகனங்கள் இயங்கும் எரிபொருளின் அடிப்படையில் (பெட்ரோல், டீசல் அல்லது சிஎன்ஜி) வரி விதிக்கின்றன. இன்னும் சில மாநிலத்தில் வருமான வரி போல வாகன வரிக்கும் ஸ்லாப் உள்ளது. அதாவது காரின் விலை அடிப்படையில் வரி விதிக்கும் வழக்கில் உள்ளது.
நன்மைகள்
இப்படி இருக்கையில் இந்தியா முழுவதும் ஒரு சாலை வரி விதித்தால் வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்பவர்களுக்கு மட்டும் பல நன்மைகள் உள்ளது. முதலாவதாக, குறைந்த சாலை வரி கொண்ட மாநிலங்களிலிருந்து வாகனங்களை வாங்குவதைக் குறைக்கும். இரண்டாவதாக, வாகனத்தின் பதிவை ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாற்றுவதை இது எளிதாக்கும்.
வரி ஏய்ப்பு
பலர் தங்கள் கார்களைக் குறைந்த சாலை வரி உள்ள மாநிலங்களில் பதிவு செய்வதன் மூலம் வரி ஏய்ப்பு செய்யும் நடைமுறையில் ஈடுபடுகின்றனர். ஒரே வரி விதிப்பு முறையால், இந்தப் பிரச்சினை களையப்படும் என Federation of Automobile Dealers Associations of India அமைப்பின் தலைவர் பைனான்சியஸ் எஸ்க்பிரஸ் தளத்தில் எழுதியுள்ளார்.
மாநிலங்கள் வருவாய்
ஆனால் இந்தியா முழுவதும் ஓரே சாலை என்று கொண்டு வந்தால் மாநிலங்களின் வருவாயில் நேரடியாகப் பாதிக்கும். ஏற்கனவே ஜிஎஸ்டி வரி விதிப்பால் பல மாநிலங்கள் வருவாயை இழந்துள்ளது, இந்த நிலையில் ஓரே நாடு, ஓரே சாலை வரி என்பதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சாலை வரி கணக்கிடு முறை
ஆனால் சாலை வரி கணக்கிடு, மதிப்பீட்டில் அனைத்து மாநிலங்களும் ஓரே மாடலை பயன்படுத்தினால் இந்தப் பிரச்சனைகள் சற்று குறையும். ஆனால் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு வர்த்தக மற்றும் பொருளாதார முறையைக் கொண்டு இருக்கும் காரணத்தால் இது கடமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
மக்களும் சரி மாநிலமும் சரி
இந்தியாவில் மக்களும் சரி மாநிலமும் சரி மாற்றுப்பட்ட பலதரப்பட்ட வகையில் இருக்கும் நிலையில் ஓரே நாடு ஓரே தீர்வு என்ற முடிவுகள் சிலருக்கு நன்மை அளித்தாலும், பலருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். பொருளாதார அடிப்படையிலும் மாநிலங்கள் மாறுபடுகிறது.
One nation one road tax: Is boon and bane?
One nation one road tax: Is boon and bane? ஒரே நாடு ஒரே சாலை வரி.. யாருக்கெல்லாம் நன்மை..? யாருக்கெல்லாம் பாதிப்பு..?