குடும்ப தகராறு.. மகளுடன் வாய்காலில் குதித்த இளம்பெண் சடலமாக மீட்பு..!

குடும்பத் தகராற்றல் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பகுதியில் வசித்துவருபவர் தீபக். இவருக்கு திருமணம் ஆகி விஜயலட்சுமி என்ற மனைவி இரு மகள்களும் உள்ளனர். ஐடி கம்பெனியில் வேலை செய்து வந்த இவர் கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக வீட்டில் இருந்தே பணி செய்து வருகிறார். இதனால் கணவன் மனைவிக்கு அடிக்கடி பிரச்சினை ஏற்படுவதாக கூறப்படுகிறது. 

சம்பவத்தன்று தூங்கிக் கொண்டிருந்தது நள்ளிரவில் கண்விழித்த போது மனைவி மற்றும் மகள்களை காணாததால் அதிர்ச்சி அடைந்தார்.  உடனடியாக அக்கம் பக்கத்தில் அவர் தேடி உள்ளார். அப்போது கீழ்பாவானி வாய்க்காலில் அவர்கள் இருசக்கர வாகனம் என்பதை கண்டு சந்தேகமடைந்த அவர் காவல்துறை உடனடியாக தகவல் அளித்தார். 

விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விஜயலட்சுமி சடலத்தை மீட்டனர். வாய்காலில் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் மரத்தை பிடித்து தொங்கிக் கொண்டிருந்த அவரது மூத்த மகளை மீட்ட நிலையில் இளைய மகளை தேடி வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.