மேகாலயா: குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒன்றிய அரசு நிர்ணயிக்காமல் இருப்பதற்கு பிரதமர் மோடியின் நண்பர் அதானியே காரணம் என்று மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் போராட்டத்தை யாரும் தடுக்க முடியாது. அவர்களை அச்சுறுத்தவும் முடியாது. மேலும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை வைத்து விவசாயிகளை மிரட்ட முடியுமா? என அவர் கேள்வியும் எழுப்பியுள்ளார்.