சமீபத்தில், மருத்துவர்கள் மீண்டும் ஒரு புதிய நோய் குறித்து நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நோயின் பெயர் தக்காளி காய்ச்சலாகும். முக்கியமாக இந்த நோய் கை, கால் மற்றும் வாய் தொடர்பானது. அதன் பரவல் தற்போது ஒடிசா மாநிலத்தில் காணப்படுகின்றன. லான்செட் சுவாச மருத்துவத்தின்படி, தக்காளி காய்ச்சலின் முதல் தொற்று கேரளாவின் கொல்லத்தில் கண்டறியப்பட்டன. மேலும் இதுவரை இந்த தொற்றால் மொத்தம் 82 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், ஒடிசாவில் 26 குழந்தைகளும் இதன் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தடன் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளே இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், டெல்லி என்சிஆர் பகுதியில் இதுவரை அதன் பரவல் பதிவாகவில்லை. இந்த நோய் எவ்வளவு தீவிரமானது மற்றும் எவ்வளவு ஆபத்தானது என்பது குறித்து எந்த தகவலும் வரவில்லை. எனவே இந்த கொடிய தக்காளி காய்ச்சலின் அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள்…
தக்காளி காய்ச்சல் குடல் வைரஸால் ஏற்படுகிறது. அத்துடன் இந்த வைரஸ் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்படுகிறது. ஏனென்றால், பெரியவர்களுக்கு வைரஸிலிருந்து பாதுகாக்க போதுமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.
தக்காளி காய்ச்சலின் அறிகுறிகள்
தக்காளி காய்ச்சலின் அறிகுறிகளைப் பற்றி நாம் பேசினால், அதில் அதிக காய்ச்சல், உடல் வலி, மூட்டு வலி, சோர்வு போன்றவை அடங்கும். அதே நேரத்தில், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், நீர்ப்போக்கு பிரச்சனை, மூட்டுகளில் வீக்கம் மற்றும் உடலில் வீக்கம் போன்ற பிரச்சனைகளும் சில நோயாளிகளிடம் காணப்படுகின்றன. இந்த அறிகுறிகள் சிக்குன்குனியாவின் அறிகுறிகளைப் போலவே மக்களின் உடலில் தெரியும். இருப்பினும், நம் நாட்டில் இதுவரை வந்த அனைத்து நிகழ்வுகளிலும், குழந்தைகளின் உடலில் சொறி காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் மிக வேகமாக பரவக் கூடியது என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும், நோய் அறிகுறி ஏற்பட்ட உடனேயே சிகிச்சை பெற்றுகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்த பிற மாநிலங்களுக்கு எச்சரிக்கை
தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்த கேரள மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இதை எதிர்த்து போராட தமிழகத்தில் 27 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது என்று தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)