சென்னை
:
சீரியல்
நடிகையா
வேண்டாம்
என்று
பல
நடிகர்கள்
தன்னை
உதாசீனப்படுத்தியதாக
வாணிபோஜன்
பேட்டியில்
கூறியுள்ளார்.
விமானப்
பணி
பெண்ணான
வாணி
போஜன்,
சினிமா
மீது
இருந்த
ஆர்வத்தால்
மாடலிங்கில்
இறங்கி
பல
விளம்பரங்களில்
நடித்துள்ளார்.
பின்
சன்தொலைக்காட்சியில்
தெய்வமகள்
சீரியலில்
சத்யா
என்ற
கதாபாத்திரத்தில்
நடித்து
இல்லத்தரசிகள்
மனதிலும்
இடம்
பிடித்தார்.
சின்னத்திரை
நயன்தாரா
சின்னத்திரை
நயன்தாரா
என
ரசிகர்களால்
அன்போடு
அழைக்கப்படும்
வாணி
போஜன்
ஓ
மை
கடவுளே
படத்தின்
மூலம்
வெள்ளித்திரையில்
ஜொலிக்கத்
தொடங்கினார்
.
அடுத்ததாக
ஜெய்யுடன்
ட்ரிபில்ஸ்
என்ற
வெப்
தொடரில்
நடித்தார்.
இந்த
வெப்
தொடர்
பெரும்
வரவேற்பை
பெற்றது.
விக்ரமுடன்
மகான்
திரைப்படத்தில்
அவருக்கு
ஜோடியாக
வாணி
போஜன்
நடித்திருப்பதாக
கூறப்பட்டது.
இந்த
படத்தில்
வாணி
போஜன்
நடித்து
இருந்தாலும்
அவரது
ஒரு
காட்சிகள்
கூட
படத்தில்
இடம்பெறவில்லை.
தமிழ்
ராக்கர்ஸ்
தற்போது
வாணி
போஜன்
நடிப்பில்
தமிழ்
ராக்கர்ஸ்
திரைப்படம்
சோனி
லைவ்வில்
வெளியாகி
உள்ளது.
திருட்டு
விசிடி
காலம்
தொடங்கி,
இன்றைய
‘டொரன்ட்’,
‘டார்க்
வெப்’
வரை
திரைப்படங்களைத்
திருட்டு
வீடியோவாக
வெளியிட்டு
வருமானம்
பார்க்கும்
கும்பலை,
திரையுலகம்
உட்பட
எங்கெல்லாம்
இருக்கிறார்கள்
என்பதுதான்
இத்திரைப்படத்தின்
கதை.
வாணி
போஜன்
பேட்டி
8
எபிசோடுங்கள்
கொண்ட
இந்த
தொடரில்
அருண்
விஜய்,
வாணி
போஜன்,
ஐஸ்வர்யா
மேனன்
உள்ளிட்டோர்
நடித்துள்ளனர்.
இந்த
படம்
தொடர்பாக
ஊடகம்
ஒன்றுக்கு
பேட்டி
அளித்த
வாணி
போஜன்,
இந்த
படத்தில்
தனது
கேரக்டர்
குறித்தும்,
நடித்த
அனுபவம்
குறித்தும்
பல
தகவல்களை
பகிர்ந்து
கொண்டார்.
சுவாரசியத்
தகவல்
வாணி
போஜன்,
தமிழ்
ராக்கர்ஸ்
படத்தில்
முன்னணி
கதாபாத்திரத்தில்
நடித்துள்ளார்.
வாணி
போஜன்,
அருண்
விஜய்யுடன்
நடிக்க
எனக்கு
இரண்டு
படங்கள்
ஒப்பந்தம்
ஆகின,
கடைசி
நேரத்தில்
நடிக்க
முடியாமல்
போனது,
இப்பொழுது
தான்
அதற்கான
வாய்ப்பு
கிடைத்துள்ளது.
இந்த
வாய்ப்பு
எனக்கு
கிடைத்த
மிகவும்
பெரிய
அதிர்ஷ்டமாக
நான்
நினைக்கிறேன்
என்றார்.
சீரியல்
நடிகையா?
மேலும்
தொடர்ந்து
பேசிய
வாணி
போஜன்,
பட
வாய்ப்புக்காக
நான்
மிகவும்
கஷ்டப்பட்டேன்,
பல
ஆடிஷனுக்கு
சென்றேன்.
அப்போது
சீரியலில்
கிடைத்த
வரவேற்பால்
பல
படவாய்ப்புகளும்
கிடைத்தன
ஆனால்,
பல
நடிகர்கள்
சீரியல்
நடிகையா?
வேண்டாம்
என்று
என்னை
தூக்கி
எறிந்தனர்
என
மனம்
நொந்து
பேட்டியில்
கூறியுள்ளார்.
ஏராளமான
படங்கள்
ஆனால்
,
உண்மையான
உழைப்புக்கு
வெற்றி
கிடைக்கும்
என்பது
போல
கேசினோ,
பாயும்
ஒளி
நீ
எனக்கு,
தாழ்
திறவா,
பகைவனுக்கும்
அருள்வாய்,
காசிமேடு,
மிரல்,
லவ்,
ஊர்
குருவி
என
அரை
டஜன்
படங்களை
வாணி
போஜன்
கைவசம்
வைத்து
இருக்கிறார்.