சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய நிதி நிறுவனமான Credit Suisse-ன் புதிய தலைமை நிதி அதிகாரியாக இந்திய வம்சாவளியினர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இதற்கு முன்பு ஜேர்மனியின் Deutsche வங்கியில் முக்கிய பொறுப்பில் இருந்தார்.
சுவிட்சர்லாந்தின் கடன் வழங்கும் நிறுவனமான கிரெடிட் சூயிஸ் (Credit Suisse) அதன் தலைமை நிதி அதிகாரியாக (CFO) இந்திய வம்சாவளியினரான தீக்ஷித் ஜோஷியை (Dixit Joshi) நியமித்துள்ளது.
இப்போது, அந்த பொறுப்பில் டேவிட் மாதர்ஸுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ள தீக்ஷித் ஜோஷி, அக்டோபர் 1 முதல் கிரெடிட் சூயிஸ் தனது பணியை தூங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீக்ஷித் ஜோஷி முன்னதாக ஜேர்மன் கடன் வழங்கும் Deutsche வங்கியில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார்.
1995-2003 காலகட்டத்தில் நியூயார்க் மற்றும் லண்டனில் இதே கிரெடிட் சூயிஸ் வங்கியில் தீக்ஷித் ஜோஷி பணியாற்றியுள்ளார். இப்போது, பூமராங் போல் மீண்டும் அதே நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக மிகப்பெரிய பொறுப்பில் தலைமையேற்கவுள்ளார்.
தீக்ஷித், முதலீட்டு-வங்கி வணிகங்களில் ஒரு பரந்த அனுபவத்துடன், ஒரு ஈர்க்கக்கூடிய டிராக்-ரெக்கார்டை கொண்டுள்ளார் என்று கிரெடிட் சூயிஸ் வங்கியின் Ulrich Koerner கூறியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு கடன் மதிப்பீடு குறைப்பு மற்றும் முதலீட்டாளர்களின் அவநம்பிக்கை ஆகியவற்றுடன் போராடிய ஜேர்மனியின் டாய்ச் வங்கியை நிலைப்படுத்த ஜோஷி உதவியதாகக் கூறப்படுகிறது. இப்போது, இந்த சுவிஸ் நிறுவனத்தின் நிலைமையும் முன்னேறச் செய்வார் என்று நம்பப்படுகிறது.
இதற்கிடையில், பாங்க் ஆஃப் அயர்லாந்து குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான McDonagh, கிரெடிட் சூயிஸ் நிறுவனத்தின் COO-ஆக பதவியேற்கிறார்.