செப்டம்பர் 6ம்தேதி சென்னை வரும் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு! செல்வப் பெருந்தகை

சென்னை: பாரத் ஜோடா யாத்திரை தொடங்குவதற்கு முன்பாக, செப்டம்பர் 6ந்தேதி இரவு மறைந்த முன்னாள் முதல்வர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்துக்கு மரியாதை செலுத்த வரும் காங்கிரஸ் எம்.பி/ ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தயாராகி வருவதாக,  சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரான செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ  கூறினார்.

குமரி முதல் காஷ்மீர்  வரையிலான 3500 கிலோ மீட்டர் பாரத் ஜோடா பாதயாத்திரையை அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. இதில் இளந்தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று பாதயாத்திரை செல்கிறார். இந்த பாத யாத்திரையானது 12 மாநிலங்கள் வழியாக 150 நாட்கள் நடைபெறுகிறது.  இந்த  பாரத் ஜோடா பாத யாத்திரை  செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்எல்ஏ  செல்வப் பெருந்தகை, “மறைந்த பிரதமர் ராஜிவ்காந்தியின் ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்துக்கு, செப்டம்பர் 7ஆம்தேதி காலை  31 ஆண்டுகளுக்கு பிறகு ராகுல்காந்தி வருகை தர உள்ளார். இதற்காக 6ஆம்தேதி இரவு சென்னை வரும் அவருக்கு காங்கிரசார் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 7ந்தேதி காலை ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை செய்கிறார்.
அதைத் தொடர்ந்து, கன்னியாகுமரி புறப்பட்டு செல்லும் அவர், அங்கிருந்து இருந்து காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை தொடங்குகிறார்.  7ஆம் தேதி இரவு கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.  தமிழகத்தில் 4 நாட்கள் 59 கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்து வருகிறது.
இவ்வாறு கூறினார்.
https://patrikai.com/all-india-congress-party-general-secretary-jayaram-rameshs-statement-on-bharat-joda-pada-yatra/

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.