நிர்ணய விலைக்கு மேலதிகமாக முட்டை விற்பனை செய்தல் மற்றும் சட்டவிரோதமாக முட்டையை களஞ்சியப்படுத்துவோரை கண்டறிவதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று முதல் ஆரமப்மாகிறது.
வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகும். பழுப்பு அல்லது சிவப்பு நிற முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபா என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தையில் முட்டை விலை அதிகரித்துள்ள நிலையில் பதுக்கி வைக்கப்பட்டும் முட்டையை அரசுடமையாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் நளின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.