பிரியாணி விருந்துடன் களைகட்டிய விஜய் மக்கள் இயக்க கூட்டம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய். அவரின் 66-வது படமான ’வாரிசு’ திரைப்படத்தை வம்ஷி பைடிப்பள்ளி இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படத்தில் சரத்குமார், ஷாம், பிரபு, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், சங்கீதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

 

மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள விஜய் நற்பணிகளுக்கு பெயர் போனவர். அவரது விஜய் மக்கள் இயக்கத்தினர் ரத்ததானம், அன்னதானம், மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், மருத்துவ முகாம் என மக்களுக்கு பல நற்பணிகளை செய்து வருகின்றனர். கடந்த மாதம்கூட நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களும், ரத்த தானத்திற்காக ‘தளபதி விஜய் குருதியகம்’ என்ற பெயரில் செயலியும்  தொடங்கப்பட்டது. இதற்காக ஈசிஆரில் நடந்த நிகழ்ச்சியில் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

இந்நிலையில் அகில இந்திய தளபதி மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப அணி தொடர்பான ஆலோசனைக்கூட்டம் இன்று நடந்தது. விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி N.ஆனந்த் தலைமையில் நடந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் மக்கள் இயக்கத்தின் பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.