புதிய தலைமுறை அறக்கட்டளை அறிமுகப்படுத்தும் வள்ளி செயலி -சுதந்திர தின விழிப்புணர்வு நிகழ்வு

75வது சுதந்திர தின ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் வகையில் புதிய தலைமுறை அறக்கட்டளையின் வள்ளியம்மை அம்மாள் மருத்துவ உதவித் திட்டத்தின் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகள் எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் ’’வள்ளி செயலி’’ உட்பட பல்வேறு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்தியாவின் 75வது சுதந்திர தின ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், புதிய தலைமுறை அறக்கட்டளையின் வள்ளியம்மை அம்மாள் மருத்துவ உதவித் திட்டத்தின் மூலம் “வள்ளி சிறப்பு முகாம்”, “இது எப்படிப் பெற்ற சுதந்திரம்?” – புகைப்படக் கண்காட்சி” மற்றும் “உங்கள் கைபேசியை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி” என்பது குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கத்தினையும் ஆகஸ்ட் 20 & 21, 2022 ஆகிய இரண்டு நாட்கள் செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் நடத்தியது.
image
ஆகஸ்ட் 19. 2022 அன்று மாலை 3.00 மணியளவில் துவக்க விழா எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் புதிய தலைமுறை அறக்கட்டளையின் செயலாளர் து.வே.வேங்கடகிரி பேசுகையில், வள்ளி மருத்துவ முகாம்கள் வள்ளி சமுதாய மருத்துவ செய்தி மடல் தமிழ் மற்றும் ஆங்கில பதிப்புகள், வள்ளி பயனாளர் அட்டை, வள்ளி ஆரோக்கிப் தூதர் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
image
விழாவின் தலைவர், டாக்டர். Lt.Col. அ. ரவிக்குமார், சார்பு துணை வேந்தர், மருத்துவம் மற்றும் அறிவியல் துறை, எஸ்.ஆர்.எம் மருத்துவமனை, பொத்தேரி அவர்கள் பேசுகையில், ‘’அறக்கட்டளை செய்து வரும் பணி ஓர் மகத்தான பணி என்றும் சுதத்திர தின பேரராட்ட வரலாற்றினை பிரதபவீக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் புகைப்படக் கண்காட்சியினை பாணவர்களாகிய நீங்கள் கட்டாயம் சென்று பார்க்க வேண்டும்” என்று கூறினார். இவ்விழாவில், டாக்டர் அ. சுந்தரம், டீன், (பெடிக்கல்), டாக்டர் டி. மைதிலி கூடுதல் பதிவாளர் மற்றும் டாக்டர்.எம்.லோகராஜ் (மாணவர்கள் விவகாரத்துறை), மருத்துவம் மற்றும் அறிவியல், எஸ்ஆர்.எம். மருத்துவமனை, டாக்டர் மேத்யூ மற்றும் திரு. கண்மணி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்; 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
image
ஆகஸ்ட் 20 & 21, 2022 நடந்த மருத்துவ முகாமில் கண் சிகிச்சை, பொது மருந்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், குழந்தை நலம் மற்றும் அறுவை சிகிச்சை ஆகிய நோய்களுக்கு பரிசோதனை செய்து மருத்துகளும் வழங்கப்பட்டன. மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி ஆகிய பகுதிகளில் இருந்து 273க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பலன் பெற்றனர். வள்ளி ஆரோக்கிய தூதுவர்கள், இந்த மருத்துவ முகாமைப் பற்றி பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்த முகாமிற்கு அவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வந்தனர்.
image
image
ஆகஸ்ட் 20, 2022 அன்று “உங்கள் கைப்பேசியை கையாள்வது எப்படி’’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தாங்கம் நடைப்பெற்றது. இக்கருத்தரங்கில், கைப்பேசியினால் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்து எஸ்.ஆர்.எம். ஸ்கூல் ஆப் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையைச் சேர்ந்த பேராரிரியர் டாக்டர் கணேஷ்குமார், அசோசியேட் பேராசிரியர் டாக்டர் சுப்ரஜா மற்றும் துணைப் பேராசிரியர் ராஜ்குமார் ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தனர். மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
இதன் தொடர்ச்சியாக “வள்ளி செயலி – மாணவர்களுக்காக மாணவர்களே செய்ய இருக்கும் ஒரு சேவை” என்கிற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.