புதுச்சேரி மாநிலம் 2022 – 2023-ஆம் நிதி ஆண்டிற்காகப் பட்ஜெட் அறிக்கையை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் இம்மாநில முதல்வரான ரங்கசாமி சட்டப் பேரவையில் இன்று காலை 9.45 மணிக்கு தாக்கல் செய்தார்.
இன்றைய பட்ஜெட் தாக்கலில் முதல் ரங்கசாமி துறை வாரியாக நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் அறிவித்தார். இன்றை அறிவிப்பில் கல்வி மற்றும் பெண்களுக்கான உதவித் தொகை முக்கிய இடம் வகிக்கிறது.
இந்நிலையில் புதுச்சேரி போல் சுற்றுலாத் துறையை முக்கிய வருவாய் ஈட்டும் துறையாகக் கொண்டு இருக்கும் மற்றொரு குட்டி மாநிலமாக விளங்குகிறது புதுச்சேரி.
லட்சம் முதல் கோடிக் கணக்கில் சம்பளம்.. சிறு நகர திறமைசாலிகளும் அண்டை நாட்டு வேலைகளும்..!
புதுச்சேரி Vs கோவா
புதுச்சேரி இன்று 2022-23 ஆம் நிதியாண்டுக்காக 10,696.61 கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில் கோவா மாநிலம் மார்ச் மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்-ல் 24,467.40 கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்-ஐ தாக்கல் செய்தது.
கோவா ஜிடிபி
கோவா 74,82,837 லட்சம் ரூபாயை ஜிடிபி-யாகக் கொண்டு இருக்கும் நிலையில், புதுச்சேரி 38,00,369 லட்சம் ரூபாயை ஜிடிபி-யாகக் கொண்டு இருக்கிறது. இதேபோல் புதுச்சேரி மட்டும் அல்லாமல் இந்தியாவில் கோவா மாநிலம் தான் அதிக per Capita income கொண்ட மாநிலமாக உள்ளது. கோவா-வின் per Capita income 5.80 லட்சமாகும்.
தமிழிசை
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10-ஆம் தேதி துணை நிலை ஆளுநர் தமிழிசை உரையுடன் தொடங்கியது. ஆனால் இந்தப் பட்ஜெட் அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததால் சட்டபேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
புதுச்சேரி பட்ஜெட்-க்கு ஒப்புதல்
இந்நிலையில் பல நாட்களுக்குப் பின்பு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு புதுச்சேரி பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்கிய நிலையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. இன்றைய அறிவிப்பில் கல்வி மற்றும் பெண்களுக்கான உதவி தொகை முக்கிய இடம் வகிக்கிறது என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் வாங்க அதைப் பற்று முழுமையாகப் பார்ப்போம்.
தொழிற்துறை
இன்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் 12.5 லட்சம் மதிப்பில் பால் உற்பத்தி நிலையம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மரச்செக்கு என்னைத் தயாரித்து அரசு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது
கல்வி துறை
பள்ளி மாணவர்களுக்கான இலவச பாடப் புத்தகங்கள், சீருடை, மதிய உணவு போன்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் கல்வி துறைக்கு ரூ. 802 கோடி ஒதுக்கீடு செய்யப்படும், இந்த நிதியில் பெரும் பகுதி வகுப்பறைகளை மேம்படுத்துவதில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்துவதில் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குடும்பத் தலைவிக்கு உதவிதொகை
புதுச்சேரி அரசின் எந்த உதவி தொகையும் பெறாத 21 வயது முதல் 57 வயதுக்குட்பட்ட அனைத்துக் குடும்பத் தலைவிக்கும் தலா 1000 ரூபாய் மாதம்தோறும் வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்தார்.
puducherry budget 2022-23: rs1000 per month for women; Check Goa GDP, per capita income
puducherry budget 2022-23: rs1000 per month for women; Check Goa GDP, per capita income புதுச்சேரி கோவா.. யாரு பெஸ்ட்..? புதுச்சேரி முக்கியப் பட்ஜெட் அறிவிப்புகள்..!