திருவனந்தபுரம்: மலையாள மெகா ஸ்டார் தற்போது ரோர்சாச், நண்பகல் நேரத்து மயக்கம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
நிசாம் பஷீர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரோர்சாச்’ படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள ரோர்சாச் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர், படத்தின் கதை குறித்து லீட் வைத்துள்ளது.

மெகா ஸ்டார் மம்முட்டி
மலையாளத் திரையுலகின் மெகா ஸ்டார் மம்முட்டி, 70 வயதிலும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார். ஆண்டுக்கு 3 முதல் 4 படங்களில் நடித்து வரும் அவர், தற்போது ‘நண்பகல் நேரத்து மயக்கம்’, ‘ரோர்சாச்’ ஆகிய படங்களில் பிஸியாக இருக்கிறார். லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மம்முட்டி நடித்துவரும் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப் படத்தின் டீசரில், சிவாஜி மாதிரி மம்முட்டி நடித்துள்ளதே இந்த எதிர்பார்ப்பின் காரணமாகும்.

முகமூடிக்குள் மம்முட்டி
அதேபோல் மம்முட்டியின் ‘ரோர்சாச்’ திரைப்படமும் டிரெண்டிங்கில் உள்ளது. ‘கெட்டியோலானு என்டே மலாக்கா’ படத்தின் மூலம், பலரது கவனத்தையும் ஈர்த்த நிசாம் பஷீர், இந்தப் படத்தை இயக்குகிறார். ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மாஸ் காட்டியது. கண்கள் மட்டும் தெரியும்படி ரத்தம் படர்ந்த முகமூடியுடன் மம்முட்டி கெத்தாக உக்கார்ந்திருக்கும் அந்த போஸ்டர், பலரையும் கவனிக்க வைத்தது.

செகண்ட் லுக் போஸ்டர்
இந்நிலையில், ‘ரோர்சாச்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கை விடவும், செகண்ட் லுக் போஸ்டர் இன்னும் மிரட்டலாக உருவாகியுள்ளது. கண்களும் வாயும் மட்டும் தெரியும் முகமூடியைப் போன்ற பாறையின் மேல், மம்முட்டி படுத்திருக்கும் இந்த போஸ்டர், எதிர்பார்ப்பை இன்னும் எகிறச் செய்துள்ளது. பாறையின் கீழே தண்ணீர் தெரிவதன் மூலம் சில உளவியல் மதிப்பீடுகள் இருப்பதையும் காணமுடிகிறது.

லீட் கொடுத்த இயக்குநர்
ரோர்சாச்’ செகண்ட் லுக் போஸ்டர், மம்முட்டி ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து லீட் கொடுத்துள்ளார் இயக்குநர் நிசாம் பஷீர். Halloween-style-இல் ரொம்பவே அதிர்ச்சியான கேரக்டரில் மம்முட்டி நடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் திரில்லர் ஜானர் படமான ‘ரோர்சாச்’, நிச்சயம் அதிர்வுகளை ஏற்படுத்தும் என்றுள்ளார். மேலும், செகண்ட் லுக் போஸ்டரில் முகமூடி அணிந்த அந்த பாறை தான், மம்முட்டியின் கேரக்டர் என்றும், புதிய அப்டேட்டை கொடுத்துள்ளார். இது, மம்முட்டியின் ரசிகர்களை படத்தின் கதை குறித்து யோசிக்க வைத்துள்ளது.